விரைவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

Vikkiravandi By Election 2024

Vikravandi : திமுக எம்எல்ஏ மறைவை அடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வேளைகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், கடந்த சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவால் , அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு … Read more

#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதியிலும்  திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் என அறிவித்தார்.பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் எனவும் ,வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 24-ஆம் தேதி    நடைபெற்றது.இதில் விக்கிரவாண்டியில் போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன்  மற்றும் நாங்குநேரியில் மற்றொரு அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து … Read more

3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரம் நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது .தற்போது வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பாக வரிசையில் வந்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

விக்கிரவாண்டியில் பரபரப்பு ! தே.மு.தி.க. – பா.ம.க. நிர்வாகிகள் இடையே மோதல்

விக்கிரவாண்டியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் விக்கிரவாண்டியில் உள்ள கல்யாணம் பூண்டியில் தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது . ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ! 3 தொகுதிகளுக்கான 11 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான  காலை 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.  காலை 11 மணி நிலவரம்:  நாங்குநேரி – 23.89% வாக்குப்பதிவு விக்கிரவாண்டி – 32.54% … Read more

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரம் என்ன ?

விக்கிரவாண்டியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.வாக்காளர்கள் தங்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகள் பதிவாகி உள்ளது.

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது .காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது . நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஓய்ந்தது பரப்புரை ! நாளை மறுநாள் இடைத்தேர்தல்

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்துள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் நாளை மறுநாள் (21-ஆம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக கடந்த 2 வாரங்களாக விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.தற்போது பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,இன்று … Read more

இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது . நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தான் நேற்று சென்னை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை  அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.இதற்கு பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக  ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும் என்றும் … Read more