இனி பாக் வீரர்களுக்கு பிரியாணி சாப்பிட தடை..! மிஷ்பா உல் ஹக் அதிரடி ..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்  உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களும் இனி  பிரியாணி சாப்பிட கூடாது என்ற உணவு கட்டுபாட்டை மிஷ்பா உல் ஹக் விதித்து உள்ளார். உலகக்கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் உடற்தகுதி பற்றிய சில கருத்துகள் எழுந்தன.இதையடுத்து உணவு கட்டுப்பாடு கொண்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.இனி வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தடை … Read more

விடுவிக்கப்பட்ட பயங்கரவாதி மசூத் அசார் ? இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த பதற்றம் ஓய்ந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்து மத்திய … Read more

முதலாக்கிற்கு பாகிஸ்தானிலும் தலாக் தலாக் தான்! அதிகரித்து வரும் தலாக் எதிர்ப்பு!

இஸலாமிய கலாச்சாரத்தில் மனைவியை விவாகரத்து செய்ய கணவன்மார்கள் மூன்றுமுறை தலாக்  என கூறினால் போதும். கணவன் மனைவியை பிரிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளப்படும். இந்த முத்தலாக் நடைமுறைக்கு தடை விதித்து, இந்திய பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது. இதேபோல சில இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது விரைவில் அண்டை நாடான பாகிஸ்தானும் இணைய உள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய நெறிமுறைகள் பற்றி அரசுக்கு யோசனை கூறும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சிலானது, முத்தலாக் … Read more

பாகிஸ்தான் வான் வழியாக செல்ல இந்திய குடியரசு தலைவருக்கு அனுமதி மறுப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்லவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் ஒரு முயற்சியாக பல்வேறு நாடுகளின் உதவியை நாடியது பாகிஸ்தான்.ஆனால் மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.ஆனால் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக … Read more

விரைவில் விசா இன்றி பாகிஸ்தானின் இந்த இடத்திற்கு மட்டும் செல்லலாம்!

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக். இவர் சீக்கியர்களின் கடவுளாக கருதப்படுகிறார். இவர் இந்திய எல்லையில் இருந்து சில கிமீ தூரத்தில் இருக்கும் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் எனுமிடத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக இருந்ததாக சீக்கியர்களால் நம்பப்படுகிறது. அதனால் ராவி நதிக்கரையில் தர்பார் சாகிப் எனும் பெயரில் அங்கு குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் அதிகம் பேர் சென்று வருவர். அவர்கள் விசா மூலம் மட்டுமே அங்கு சென்று வந்துள்ளனர். இதனை தீர்க்கும் வகையில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் … Read more

பாகிஸ்தானில் முதல் ஹிந்து பெண் காவலராக பணியமர்த்தப்பட்ட முதல் பெண்மணி!

பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு இந்து பெண்மணி காவல்துறை உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். பாகிஸ்தான் காவல்துறையில் முதல் ஹிந்து பெண் அதிகாரி ஆக இவர் திகழ்ந்துள்ளார். பாகிஸ்தான், சிந்து மாகாணத்தை சேர்ந்த புஷ்பா கோலி என்பவர், காவலர் போட்டித்த தேர்வு எழுதி அதில் வெற்றி கண்டு தற்போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு … Read more

அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த மலிங்கா! போட்டியில் தோற்ற இலங்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் யாக்கர் மன்னன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலிங்கா, தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, தற்போது டி20 போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி  இலங்கை அணி உடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி … Read more

இந்தியா – பாகிஸ்தான் இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர்-பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேச்சு

இந்தியா – பாகிஸ்தான் இடையே   அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இறுதிப்போர்  நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும்  மேலும் ஜம்முவை தனி யூனியன் பிரதேசங்களாகவும் , லடாக்கை தனி யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதன் பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் … Read more

பாகிஸ்தான் புதிய பயிற்சியாளர்..! முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்ய வாய்ப்பு..!

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் தொடர் உடன் வெளியேறியது. இதனால் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பயிற்சியாளர் தேடும் வேட்டையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தான் அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில்  வெற்றிகளை தேடித் தந்துள்ளார். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ட்வீட்!

இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்க, அதன் பின்னர் நேற்று முதல் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று 10 மேற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் பல  ட்வீட்  பதிவு செய்துள்ளார். அதில், இந்தியா தான் தீவிரவாதிகள் பெயரை சொல்லி பாகிஸ்தானுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. என்றும், பயங்கரவாதிகள் ஒரு … Read more