மத்திய அமைச்சரவை ஊரக அஞ்சல் அலுவலர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அஞ்சல் அலுவலர்களின் ஊதியத்தை 4மடங்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் ஊரகப் பகுதிகளில் 3லட்சத்து எழுபதாயிரம்பேர் கிளை அஞ்சல் அலுவலர்களாகவும், உதவி அஞ்சல் அலுவலர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இப்போது 2295ரூபாய் முதல் 4415 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தை 4 மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். 2016ஜனவரி 1 … Read more

பலத்த பாதுகாப்புக்கிடையே பெங்களூருவில் வெளியானது காலா திரைப்படம்!

இன்று உலகின் பல நாடுகளில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து காலா திடைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு நீதிமன்றம், “கர்நாடகாவில் காலா … Read more

பெங்களூருவிலுள்ள மந்த்ரி மாலில் காலா படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!

இன்று உலகின் பல நாடுகளில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து காலா திடைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு நீதிமன்றம், “கர்நாடகாவில் காலா … Read more

வரும் 19-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல்!

வரும் 19-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் விழா நடைபெறும் என்றும் ஆய்வு மாணவர்கள் மற்றும் முழுநேர பி.இ., பி.டெக்கில் படிப்புகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு விழாவில் பட்டங்கள், தங்கப் பதக்கங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் பல்கலைக்கழக இணையதளமான www.annauniv.eduவில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

BREAKING NEWS: சமூக விரோதி என்று கூறிய ரஜினிகாந்த் மீது வழக்கு?சிலம்பரசன் ரஜினிக்கு எதிர்ப்பு !

கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் … Read more

சென்னை உயர்நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்புக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 ஆயிரத்து 750 பேர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும், … Read more

12-ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு?பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,மேல்நிலை பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று இது தொடர்பான சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேலின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாணவர்கள் 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் செய்திகளுக்கு … Read more

நாளை கோவை – பெங்களூர் இடையே வாரம் 6நாட்கள் இயங்கும் உதய் விரைவு ரயில் தொடக்கம்!

கோவையில் நாளை நடைபெறும் விழாவில் ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் கோவை – பெங்களூர் இடையே வாரம் ஆறு நாட்கள் இயங்கும் உதய் விரைவு ரயிலைக்  அறிமுகப்படுத்திப் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். கோவை – பெங்களூர் இடையே திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் குளிர்வசதியுடன் கூடிய ஈரடுக்குப் பெட்டிகள் கொண்ட உதய் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் நாளில் பகல் பத்தரைக்குப் புறப்படும் ரயில் மாலை 5.20மணிக்குப் பெங்களூர் சென்றடையும். வழக்கமான கால அட்டவணைப்படி கோவையில் காலை … Read more

பேஸ்புக்கில் 45 நிமிடங்கள் காலா லைவ்!வெளியிட்டவர்க்கு மனமார்ந்த நன்றி!

உலகமெங்கும் இன்று ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தி.மு.க. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு!சி.பி.ஐ. விசாரணை வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்த முற்பட்டார். அப்போது பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அவையில் விவாதிப்பது மரபல்ல எனவும் எடுத்துரைத்தார். எனினும், இந்த விவகாரம் … Read more