ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரஷீத் கான்!

டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் ..!

ஆப்கானிஸ்தானில்  பத்திரிகையாளர்கள் 2 பேரை தாலிபான்கள் கொடூரமாக தாக்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தங்கள் முழு கட்டுப்பாட்டில் தலிபான்கள் வைத்துள்ளனர். இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகள் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்டு வந்தனர். தாலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பி வருகிறார்கள். இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து காபூலில் பெண்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தை பதிவு செய்த … Read more

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்த சீனா..!

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்த சீனா  காபூலைக் கைப்பற்றிய 22 நாட்களுக்குப் பிறகு தலிபான்கள் தங்கள் அரசாங்கத்தை அறிவித்தனர். ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் சீனா மற்றும் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தலிபான் அரசுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு … Read more

இந்திய எல்லையில் ஊடுருவ திட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை!

உளவுத்துறை தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு நிலவரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை. ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய எல்லையில் ஊடுருவல்களை அதிகரிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகள் … Read more

ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட அனுமதியில்லை -தலிபான் அதிரடி..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலிபான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும்  நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தலிபான்கள் தங்கள் வசப்படுத்தினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ … Read more

#BREAKING: ஆப்கான் விவகாரம்- பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை..!

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். பின்னர், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டனர். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல … Read more

தாலிபான்களிடம் பணிந்த பஞ்ச்ஷிர் தேசிய எதிர்ப்பு படை…!

ஆப்கானிஸ்தானிலுள்ள தேசிய எதிர்ப்பு படை பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் தெரிவித்தனர். மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதியோடு முழுமையாக வெளியேறிவிட்டது. இதனை அடுத்து புதிய … Read more

பஞ்ச்ஷிர் மாகாணம் எங்கள் வசம் – தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றியதாக தலிபான் அமைப்பினர் அறிவிப்பு.  ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் நேற்று கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பிரச்சனையாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் பஞ்ச்ஷிர் இப்போது எங்கள் வசம் உள்ளது என்று தலிபான் தளபதி கூறினார். எதிர்க்கட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைத் … Read more

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்திலிருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் 110 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டது குறித்த தகவல் இதுவரை … Read more

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறி விட கூடாது – ஐநா பாதுகாப்பு கவுன்சில்!

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட கூடாது என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இந்நிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. மேலும் தாங்கள் வெளியேறிவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபையின் … Read more