தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

thanjai periya koyil

Chithirai Festival: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள … Read more

இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.  திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளான இன்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும். இன்று முதல் முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். 9ம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை கொடியேற்றம்..!

கேரளாவில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி சபரிமலை கோயில் திருவிழா கொடியேற்றம் 19-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மார்ச்-18 ஆம் தேதி, பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டு விழா நடைபெறுகிறது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

வெகுசிறப்பாக நடந்தது கோட்டை மாரியம்மன் கோவில்-கொடியேற்றம்!!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்  வெகுச்சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 20ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. பிப்.,21ந் தேதி பூச்சொரிதல் விழாவும்,பிப்., 23ந் தேதி சாட்டுதலும் வெகுச்சிறப்பாக நடந்தது.இதைத் தொடர்ந்து மாசித்திருவிழாகொடியேற்றம் நடந்தது. விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் சாத்துபடி செய்தபின்னரே இந்த கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படியே … Read more

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மனுக்கு மாசித்திருவிழா கொடியேற்றம்-வெகுசிறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்து அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவிழா கொடிப் பட்டமானது  திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக எடுத்து சென்று மீண்டும்  காலை 5.10 மணிக்கு கோயிலுக்கு வந்தடைந்தது.பின்னர் கொடிமரத்தில் காப்பு கட்டி திருவிழா கொடியினை ஏற்றினாா்.அதன்பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. … Read more

தென்காளஹஸ்தியில் சிவராத்திரி திருவிழா…கொடியேற்றம் கோலாகலாம்

தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈத்தாமொழி அருகே  அமைந்துள்ள இலந்தையடித்தட்டு பிரசித்திப்பெற்ற தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் காலை 9.30 மணிக்கு மகாசிவராத்தி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.சிவராத்திரி நெருங்குவதால் அனைத்து சிவஸ்தலங்களிலும் சிவராத்திரி வெகுச்சிறப்பாக கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது.இதனை முன்னிட்டு தற்போது பிரசித்திப்பெற்ற சிவ ஆலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று வருகிறது.