திருச்செந்தூா் வெயிலுகந்தம்மனுக்கு மாசித்திருவிழா கொடியேற்றம்-வெகுசிறப்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்து அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருவிழா கொடிப் பட்டமானது  திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக எடுத்து சென்று மீண்டும்  காலை 5.10 மணிக்கு கோயிலுக்கு வந்தடைந்தது.பின்னர் கொடிமரத்தில் காப்பு கட்டி திருவிழா கொடியினை ஏற்றினாா்.அதன்பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. அதன் பின் மாலை அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருளினார்.

பத்துநாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது காலை, மாலை இரண்டு வேளைகளிலும் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் வலம் வந்து காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பிப்., 25ந்தேதி காலை 5.30 மணிக்கு தேரோட்டமானது நடைபெறுகிறது

author avatar
kavitha