திருச்செந்தூர் அருகே கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் … Read more

ராமேஸ்வரம் மீனவர்களை கற்கள், பாட்டில்களை கொண்டு தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். … Read more

வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு அணியுடன் இன்று மோதல்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு ஸ்ரீகண்டிவீரா மைதானத்தில் நடைபெறும் ஆடடத்தில் சென்னையின் எப்சி – பெங்களூரு எப்சி அணிகள் மோதுகின்றன. பெங்களூரு எப்சி அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி … Read more

ஆந்திரா மாநிலத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ஆந்திரா மாநிலத்தில்  கடப்பா அருகே ஆயில் டேங்கில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை

புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிகட்டம்!

புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை மணற்பரப்பை உருவாக்கும் திட்டம், மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தலைமைச் செயலகம் அருகே கடற்கரை ஓரமாக 200 மீட்டர் நீளத்திற்கு, கருங்கற்கள் அடுக்கப்பட்டு, பின்னர் மணலைக் கொட்டி இடம் சமன் செய்யப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பணியாக, தடுப்புச் சுவர்கள் … Read more

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தமிழக வீரருக்கு இடம் இல்லை!

இந்தியா லெவன்: ஆர்.ஜி. சர்மா, எஸ் தவான், எஸ் ஐயர், எம் பாண்டே, டி கார்த்திக், டோனி,  பாண்டிய, புவனேஷ் குமார், குல்தீப்  யாதவ்,பும்ராஹ்,  சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூன்றாவது ஒரு நாள் போட்டி இந்திய அணி பந்து வீச்சு!

இலங்கைக்கு  எதிரான  மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை!

ஈரோடு மாவட்டம் கோபியில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதன் ஆலோசகராக புஷ்பராஜ் இருந்து வந்தார். ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம், புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால், ஒப்புதல் அளிக்க தங்கவேல், ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், … Read more

ஆர்.கே.நகர் வாக்குச்சாவடி முகவரே செல்வி, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல!

செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல . வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.சற்று முன் தான் செல்வி பணபட்டுவாடா புகாரில் போலிசாரால் அழைத்து சென்றார்.

புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்கள் வெளியிட வேண்டும்!

கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆணை செல்லாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது – அன்புமணி ராமதாஸ்.