விராட் கோலியை டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கும் வாய்ப்பு இருக்கிறது.! – கபில் தேவ் அதிரடி.!

விரைவில் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. இந்த சமயம் புதிய வீரர்களுக்கு இடம் கிடைக்கிறதா? அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடம் கிடைக்க போகிறதா? நட்சத்திர வீரர்களின் தற்போதைய பார்மை கண்டு அவர்களுக்கு ரெஸ்ட் அளிக்கப்பட உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஓர் அதிரடி கருத்தை … Read more

#IPL2022 : ஒருவழியாக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.!

பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  ஐபிஎல் தொடர் கோலாலகமாக ஆரம்பித்தாலும், அதன் தாக்கம் இன்னும் ரசிகர்கள் மனதில் வராததற்கு காரணமாக இருந்தது, சென்னை , மும்பை எனும் இரு பெரும் துருவங்களும் தொடர் தோல்விகளை பெற்றுள்ளது தான் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த களங்கத்தை துடைக்க இன்று சென்னை அணி , போங்களூரு அணியுடன் மோத தயாரானது. முதலில் பேட் செய்த சென்னை … Read more

#BREAKING : ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கம்..!

டி20-ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.  இந்திய அணியின் டி20 கேப்டன்னாக ரோகித் சர்மா தற்போது செயல்படுகிறார். அதேநேரத்தில் விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார். நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மோத உள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், கேப்டனாக … Read more

ஜடேஜாவின் ஆட்டத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் – விராட் கோலி..!!

தனி ஒரு வீரரிடம் நங்கள் வீழ்ந்துவிட்டோம் என்று விராட் கோலி நேற்று போட்டி முடிவடைந்தவுடன் கூறியுள்ளார்.  ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 19 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா … Read more

ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த கிங் கோலி..??

ஐபிஎல் போட்டிகளில் 6,000 ரன்கள கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார்.  ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில்  டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 … Read more

#Ind vs Aus Live Score:டாஸ் வென்றும் தடுமாறும் ஆஸ்திரேலியா ,அஸ்வின் மேஜிக் அபாரம் ! 65/3 (27)

7:20-Lunch Break :இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .கேப்டன் விராட் கோலியின்  இல்லாமல் இந்தியா இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.ஆரம்பம் முதலே இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. பும்ரா (ஜோ பர்ன்ஸ்) விக்கெட்டை வீழ்த்த அவரை தொடர்ந்து அஸ்வின் தனது மேஜிக் சுழற்சியில் (மத்தேயு வேட் ,ஸ்டீவன் ஸ்மித் … Read more

விராட் கோலியை விட ரோஹித் தான் சிறந்த கேப்டன்……கவுதம் கம்பீர்..!

13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. மேலும், போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் … Read more

ரோஹித் சர்மா விராட்கோலி இளம் வீரர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்கள்..!

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் மிகவும் ஒரு சிறந்த வீரர் என்று கூறலாம், அவர் செய்த சாதனைகள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கம்ரான் அக்மல் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். அதில் பேசிய கம்ரான் அக்மல் மிகவும் பெரிய உயரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருக்கிறார்கள். வளர்ந்து வரும் இளம் வீரர்களான கேஎல் ராகுல் … Read more

விராட் கோலிக்கு பந்து வீச மிகவும் கடினமாக இருந்தது- ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

விராட் கோலிக்கு பந்து வீச மிகவும் கடினமாக இருந்தது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் ஒரு புதிய சாதனையை படைத்திருந்தார், ஆம் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார், இதற்காக பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறினார். இந்நிலையில் சமீபத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, இந்தியா அணி 2014 ஆம் ஆண்டு … Read more

வீடியோ: கடின பயிற்சியில் விராட் கோலி..!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கடினமாக பயிற்சி செய்து தனது இன்டஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய … Read more