காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Rahul Gandhi - Mallikarjun Kharge

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.  வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு … Read more

இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல்… ராகுல் காந்தி பேட்டி!

Rahul Gandhi

Rahul Gandhi: இந்த தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் இன்று மாலை  6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு … Read more

பாஜக வேட்பளர் திடீர் விலகல்.. புதிய வேட்பாளரை நியமித்த கட்சி தலைமை!

Satyadev Pachauri

Satyadev Pachauri: மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பாஜக எம்பி சத்யதேவ் பச்செளரி திடீரென விலகினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளிலும் ஆயுதமாகி வருகின்றனர். அதன்படி, கூட்டணி, பங்கீட்டை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், பாஜக இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், … Read more

ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.!

Upendra Singh Rawat: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உபேந்திரா சிங் ராவத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெண்ணொருவருடன் உபேந்திரா சிங் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் வாபஸ் முடிவை உபேந்திரா எடுத்துள்ளார். தற்போது உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள உபேந்திராவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இப்படியான சூழலில் தான், உபேந்திரா வெளிநாட்டு வம்சாவளி … Read more

பரபரக்கும் உ.பி தேர்தல்.! எதிர்க்கட்சி கொறடா ‘திடீர்’ ராஜினாமா.!

Samajwadi Party Manoj Pandey

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். … Read more

3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..

Rajya sabha elections 2024

நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும். மாநிலங்களவை தேர்தல் : ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் … Read more

உ.பி.யில் கோர விபத்து… 7 குழந்தைகள் உட்பட15 பேர் உயிரிழப்பு!

up accident

உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை ஏற்றி சென்று கொண்டிருந்ததாக டிராக்டர் உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள குளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் கஸ்கஞ்சில் உள்ள பாட்டியாலி தரியாவ்கஞ்ச் என்ற சாலையில் காலை 10 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர … Read more

காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி பங்கீடு இறுதியானது! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

India alliance

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று காலை அகிலேஷுடன் தொலைபேசியில் தொடர்புக்கொடு பேசியதை தொடர்ந்து, இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையேயான கூட்டணி, தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்ததாக … Read more

இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது!

rld

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிரச்சனை இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் யாதவ், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கைகோர்த்தார். இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதுபோன்று, இந்தியா கூட்டணியில் தான் … Read more

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்.. தொல்லியல் துறையின் முக்கிய தகவல்கள்….

UP Varanasi Gyanvapi Masjid

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் … Read more