வங்கக்கடலில் ஆம்பன் புயல்.! தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு.!

ஆம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியானது வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த ஆம்பன் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 20 ஆம் தேதியன்று மேற்கு … Read more

தூத்துக்குடியில் புதிதாக 86 போலீசார் பணியில் சேருகின்றனர் .!

தூத்துக்குடி மாவட்டத்தில்  புதியதாக தேர்வு செய்யப்பட்ட 86 போலீசார் பணியில் சேர உள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை போலீசார், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை காவலர்கள் உள்ளிட்ட 8,888 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கான உடல்கூறு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை முடிந்துவிட்டன. இவர்களுக்கு பயிற்சி கடந்த மாதம் 2-ம் தேதி  தொடங்க இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி தொடங்கவில்லை. இதனால், தேர்ச்சி … Read more

கொரோனாவை தட்டி தூக்கிய தூத்துக்குடி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 27 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது   கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், தற்போது  25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஒரே ஒருவர் மட்டும்  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகம் … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கனிமொழி எம்.பி 1.50 கோடி நிதி வழங்கினார்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணம் கோரி மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்ற மக்களவை கழக குழு  துணை தலைவருமான கனிமொழி , தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் மீண்டும் 50 லட்சம் … Read more

தூத்துக்குடி விமானநிலையம் 2020க்குள் சர்வதேச தரம் உயர்த்தப்படும்..!

தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தில் தற்போது பணிகள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில் , தூத்துக்குடியில் விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் இரவு நேர விமான சேவை தொடரும் என கூறினார். மேலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான தமிழக அரசு நிலம் பெற்றுள்ளது .விமான நிலையத்தை விரிவாக்கத்திற்கு விமான நிலைய ஆணைய தலைவரிடம்  அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் … Read more

கனமழையால் தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவிலிருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இஸ்ரோ திட்டம்: தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு ! எங்கு தெரியுமா…!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரிக்கும் அனைத்து வகையான ராக்கெட்கள் மற்றும் சாட்டிலைட்களை ஆந்திரா எல்லையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்வெளிக்கு ஏவப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியிலும் இதேபோல் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் தெறிவித்துள்ளனர். தூத்துகுடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால், … Read more

ஒரு வருடம் ஆகியும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை இல்லை : நல்லகண்ணு

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நல்லக்கண்ணு, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மற்றும் திமுக கட்சியினர் அவர்களது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு பின் இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று ஒருவருடம் ஆகியும் ஸ்டெர்லைட் ஆழியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு நினைவு … Read more

பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைது!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதனையடுத்து, தூத்துக்குடியில் முக்கிய பகுதிகளில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட போது, முன்னெச்சரிக்கை நடடிக்கையாக நாகர்கோவிலில் வைத்து, இவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு, பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

கடந்த வருடம் மே-22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள். இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உருவ படங்களுக்கு மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி புனித தோமையார் ஆலயத்தின் முன்பு அப்பகுதி மக்கள் … Read more