கொரோனாவை தட்டி தூக்கிய தூத்துக்குடி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 27 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது   கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், தற்போது  25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஒரே ஒருவர் மட்டும்  தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று  தீவிரம் குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் 2,323  பேருக்கு இதுவரை  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக சென்னையில் மட்டும்  இதுவரை 906 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை 1,258 கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.