பருப்பு வடைக்குள் சுண்டெலி..! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!

சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்றில் வாங்கிய வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி இருந்துள்ளது.  திண்டுக்கல் சின்னாளம்பட்டி பகுதியில் டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் பலகாரங்களை பொதுமக்கள் வாங்கி சொல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அந்த கடையில் 10 வயது சிறுமி ஒருவர் வடை வாங்கி சென்றார். பருப்பு வடையை எடுத்து சாப்பிடுவதற்க்காக வடையை பிய்த்துள்ளார். அப்போது அந்த வடைக்குள் கருகிய நிலையில் சுண்டெலி ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, பெற்றோரிடம் காண்பித்துள்ளார். … Read more

பிரதமர் தேநீர் விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள் – நடிகர் பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது அரசியல் கட்சியினரின் பேச்சுக்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? … Read more

50% வாடிக்கையாளர்களுடன் தேநீர் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி!

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் தேநீர் அருந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

தமிழகத்தில் இன்று முதல் டீ கடைகள் செயல்பட அனுமதி!

தமிழகத்தில் வருகிற 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் டீக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில தளர்வுகள் உடன் தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இந்த ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில்  டீ கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் தேநீர் கடைகளை திறப்பதற்காக கோரிக்கை … Read more

3 பொருட்கள் வைத்து சுவையான டீ கடை போண்டா செய்வது எப்படி?

வீட்டிலேயே தெருவோர டீ கடைகளில் கிடைக்கும் சுவையான இனிப்பு போண்டா  3 பொருட்களை வைத்து சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் மைதா மாவு – 1 கப் தோசை மாவு – 1/2 கப் சீனி – 3/4 கப் ஏலக்காய் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை மற்றும் தோசை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். இதனுடன் லேசாக உப்பு சேர்த்து … Read more

தூத்துக்குடியில் டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை!

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டீ கடையில் நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அமைப்பு சாரா பாஜக கட்சியின் செயலாளராக பதவியில் உள்ளவர் தான் ராமதாஸ். இவர் ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரையில் உள்ள டீ கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கி எனும் 21 வயதுடைய இளைஞர் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.