ஆசிரியரிடம் விடைத்தாளில் கோரிக்கை வைத்த மாணவன்.! புகைப்படத்தை வெளியிட்ட ஆசிரியர்.!

அமெரிக்காவில் கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் மாணவன் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் போனஸ் புள்ளிகளை, யார் குறைந்த மதிப்பெண் பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு வழங்க முடியுமா என்று ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியிருந்தான். இதனை பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து அவரது முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை … Read more

பிரபல பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 வயதுடடைய மாணவி ஆயிஷா ராணா என்பவர் விடுதியில் தங்கி பயோடெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் … Read more

நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு.!

நாசா செல்லும் மாணவிக்கு தமிழக முதல்வர் ஊக்குவிக்கும் விதமாக ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படுத்தவாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் சாதனை … Read more

பொதுத்தேர்வுவில் மாணவிகளை சோதனை செய்ய தடை.!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வின் போது மாணவிகளை ஆண் ஆசிரியர்கள்  யாரும் சோதனை செய்யக் கூடாது என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 2-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத்தேர்வுக்காக முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. … Read more

கொரோனாவில் இருந்து மீண்ட முதல் இந்திய மாணவி.! விரைவில் வீடு திரும்புவார்.? மருத்துவர்கள் அறிவிப்பு.!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் இருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் வந்துள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் … Read more

சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்பி.! பாராட்டுகளை குவித்த கிராம மக்கள்.!

மதுரையில் மீனாட்சிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். மாணவியின் கோரிக்கை அறிந்த மதுரை தொகுதி எம்.பி. இன்றிலிருந்து பள்ளிக்கு சென்றுவர மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார். இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.  கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழகம் … Read more

காலையில் பிரசவம் மாலையில் கல்யாணம்.! காவல்துறை எடுத்த அதிரடி முடிவு.!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோகிலா என்ற பெண் காதல் வசப்பட்டு திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றக்கொண்ட அதிர்ச்சி சம்பவம். இதை கண்ட பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்.  போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் … Read more

பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது.! பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.!

டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில், மோடி பேசுகையில், பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று குறிப்பிட்டார். டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே … Read more

இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 2-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பலி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதாவும், மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யாவும், தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் … Read more

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளையை மாமியார் வீட்டில் கைது செய்த போலீசார்.!

சென்னையில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில், மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமக்கள் கையில் கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புது மாப்பிள்ளை புவனேஷை விருந்துக்காக கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர். சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலை ஒருவரின் திருமண விழாவில் மணமகன் கூட படித்த … Read more