ஸ்டெர்லைட் எங்களுக்கு தேவையில்லை.! தமிழக அரசு திட்டவட்டம் .!

Sterlite Case in Supreme court of India

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசூழல் மாசுபடுகிறது, அங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என கூறி எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த வேளையில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் தூத்துக்குடியில் … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கோரி மனு..!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டதாக புகார் எழுந்து வருகிறது.  இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.., வேதாந்தா கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்..!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு. இன்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்ப்பான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும். அதுவும் வழக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் அவசர வழக்காக  தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை … Read more

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சுற்றுசூழலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசானது சீல் வைத்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உயர் நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை … Read more

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கு – இன்று விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்குகிறது.   தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது . துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து … Read more

துப்பாக்கி சூடு நடந்ததால் மட்டும் ஆலை மூடப்படவில்லை! ஸ்டெர்லைட்டிற்கு எதிராக அரசு கடுமையான வாதம்!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் பெரிதாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்கையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதற்க்கு எதிராக, ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்று சூழல் துறை, வனத்துறை மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் என ஒவ்வொரு தரப்பும் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று, … Read more