தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு …!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் … Read more

#Breaking : நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ..!

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்பொழுதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை திருவள்ளூர் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை … Read more

நாளை 5 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …!

கனமழை தொடர்வதால் 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

புதுச்சேரி : பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு …!

தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு … Read more

காற்று மாசு : டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு!

டெல்லியில் காற்று மாசு தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்துவதாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேவைப்பட்டால் டெல்லியில் உள்ள காற்று மாசை தடுக்க முழு … Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ….!

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதாலும்,  தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் இன்று 14 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் … Read more

புதுச்சேரியில் நாளை தொடங்கவிருந்த பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு ….!

புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் … Read more

தொடரும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா…?

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது கனமழை தொடர்ந்து வருவதன் காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த … Read more

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வருவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, … Read more

புதுச்சேரியில் நவம்பர் 8 முதல் பள்ளி திறப்பு -அமைச்சர் நமச்சிவாயம்..!

புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு. புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 1-8-ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது; நகரில் 9-முதல் 1 மணி வரையும், கிராமங்களில் 9:30 முதல் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவித்தார். மேலும், வருகை பதிவேடு கிடையாது, சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல  1-8-ஆம் … Read more