நைஜீரியாவில் கடத்தப்பட்ட 136 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு …!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 136 மாணவர்கள் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை பணம் கொடுத்து, மீட்டுக் கொள்ளும் படியாக பயங்கரவாதிகள் தெரிவித்திருந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அந்ததொகை போதுமானதாக இல்லை என பயங்கரவாதிகள் வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கடத்தப்பட்ட 136 மாணவர்களையும் பயங்கரவாதிகள் விடுவித்து விட்டதாக … Read more

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது- அதிரடி அறிவிப்பு..!

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை … Read more

கர்நாடகாவில் இன்று 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்…!

கர்நாடகாவில் இன்று 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சில மாநிலங்களில் அவ்வப்போது திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வெளியானது..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுககள் அனைத்தையும் ரத்து செய்து அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், கொரோனாவால் 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10-ஆம் மாணவர்களுக்கான தற்காலிக … Read more

#BREAKING : செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி…!

செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி. தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா? என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.  அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6ம் தேதி வரை, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள … Read more

கடலூர் அரசு பள்ளியில் விபத்து…! தீயில் கருகிய புத்தகங்கள்…!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ விபத்து.  கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்த நிலையில், பணியை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், அனைத்து விதமான ஆவணங்கள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ள அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான கரணம் ஒன்றும் தெரியவில்லை. இதனையடுத்து  கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, … Read more

ஆந்திரப்பிரதேச பள்ளிகள் திறக்கப்பட்டதில் 40-50% மாணவர்கள் வருகை..!

ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது. அதனால் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் விதிமுறைகளை கடைப்பிடித்து இன்று ஆந்திரமாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும். பள்ளிகளில் வகுப்பறைகளை அதிகரிக்கும் முறை அல்லது பகுதி நேரமாக பள்ளிகளில் வகுப்புகளை … Read more

பள்ளிகளைத் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்- செளமியா சுவாமிநாதன்..!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் செளமியா சுவாமிநாதன் பள்ளிகளை திறக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து சில மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகளை தொடங்கப்பட்ட போதிலும், தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக, பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. தொற்றுநோய் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்த சுவாமிநாதன் … Read more

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் திறப்பு இல்லை” – புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ..!

புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகள் திறப்பு தற்போது இல்லை என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், இறப்பு மற்றும் இறுதி சங்கு … Read more

தனியார் பள்ளிகள் கட்டணம்: தீர்ப்பு இன்று வெளியாகிறது..!

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணத்தை 2 தவணையாக அதாவது 40% மற்றும் 35%  வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனியார் பள்ளிகள் … Read more