பீஸ்ட்டை அந்தரத்தில் விட்டு சென்ற நெல்சன்.! ரஜினி பட வேலை கோலாகல ஆரம்பம்.?!

அண்ணாத்த திரைப்படத்தின் கலவையான விமர்சனங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை பலமாக சிந்திக்க வைத்துள்ளது. அதனால், அடுத்த பட இயக்குனரை கவனமாக தேர்வு செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த பட்டியலில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என பலர் இருந்தனர். ஆனால் அனைவரும் இளம் இயக்குனர்கள்.   தற்போது இந்த பட்டியலில் ஓகே வாங்கி இருப்பது பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தானாம். இவர் கூறிய கதை ரஜினிக்கு பிடித்துப்போக தற்போது அதனை விரிவு படுத்தி வருகிறாராம் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிரளவைத்த 83 திரைப்படம்.! டிவிட்டரில் புகழாரம் சூட்டி மகிழ்ச்சி.!

83 படத்தை பார்த்த பிறகு தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், ‘படம் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிகழ்வை மையப்படுத்தி வரலாற்று சித்திரம் போல 83 திரைப்படம் உருவானது. கபில் தேவ்வாக ரன்வீர் சிங் நடித்திருந்தார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், … Read more

நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை – இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு இணையதளம் அறிவிப்பு!

டி.ன்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடக்கம். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை TNPSC மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், டின்.பி.எஸ்.சி.தேர்வுக்கு பயிற்சியளிக்க ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலம் பயிற்சி அளிக்கப்படும் … Read more

27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் – இளையராஜா.!? தலைவர் 169 கிளாஸ் அப்டேட்.!

பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினிகாந்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை. வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும். விமர்சக ரீதியில் அனைவரும் கொண்டாடும்படியான ரஜினி படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம். அதனால், தான் அவரது பிறந்தநாளுக்கு … Read more

ரஜினியுடன் இணைய இருந்தாரா பாகுபலி ‘ராஜமௌலி’.?! கதை கூட ஓகே.! ஆனால்.!?

ராஜமௌலியின் அப்பா விஜேந்திர பிரசாத் ரஜினியிடம் கதை கூறினாராம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையோடு நின்று விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் அவரது ரசிகர்களையும், குடும்ப செண்டிமெண்ட் கொண்டு குடும்பங்களையும் கவர்ந்ததே தவிர அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அவரது பிளாக் பஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் ரஜினிகாந்த். இல்லையென்றால் சென்ற … Read more

ரஜினிக்கு நிகர் ரஜினியே.! உடல் நலமில்லா தனது ரசிகைக்கு சிரித்த முகத்துடன் ஆறுதல் கூறி தேற்றும் சூப்பர் ஸ்டார்.!

பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல, ரஜினிகாந்த் எந்த … Read more

முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழக முதல்வர்,பிரதமர் மோடி என அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில்,தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தந்து அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என்னுடைய பிறந்த நாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், … Read more

இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மனமார வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை. இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து … Read more

“அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவரும், மக்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப் படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more