கமல் தடுக்காவிட்டால் சாமியாராக செல்ல துணிந்த ரஜினி.! நடந்தது என்ன?

kamal and rajini

Kamal – Rajini: தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையேயான நட்பை பற்றி சொல்ல தேவையில்லை. நீண்ட நாட்களாக இருவரும் இணைபிரியா நல்ல நண்பர்கள், சினிமாவை தாண்டி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இடையே அப்படி ஒரு சிறந்த நட்பு உண்டு. சமீபத்தில், இருவரும் ‘தலைவர் 170’ மற்றும் ‘இந்தியன் 2’ படங்களின் படப்பிடிப்பின் போது சந்தித்தனர். READ MORE – நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் … Read more

17 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் திரைக்கு வரும் ரஜினி – கமல் படங்கள்!

MUTHU - AALAVANDHAN

கமல் ஹாசனின் ஆளவந்தான் (2001) மற்றும் ரஜினிகாந்தின் முத்து (1995) ஆகிய படங்கள் டிசம்பர் 8 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர். டிசம்பர் 8ம் தேதி ரஜினிகாந்தின் ‘முத்து’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனால், ரஜினி – கமல் ரசிகர்களுக்கு அந்த நாள் கொண்டாட்டமாக அமைய போகிறது. … Read more

ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? – கே.பாலகிருஷ்ணன்

தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி.  நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை , கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், அரசியல் பற்றி விவாதித்ததாகவும், ஆனால் அதுபற்றி இப்பொது கூற முடியாது … Read more

JustNow : தமிழக ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்…!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  – ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு.  சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பானது, மரியாதையினிமித்தமான என ஆளுநர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

நான் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! விருது வழங்கி கௌரவித்த அதிகாரிகள்…

தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நபர் ரஜினிகாந்த் என வருமான வரித்துறை விருது வழங்கி உள்ளது.  தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக நம்பர் 1 இடத்தை தக்க வைத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்து கொண்டே போகிறது. இவர்தான் தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் என்று கூறப்படுகிறது. அதனை மெய்யாக்கும் விதமாக தற்போது வருமான வரித்துறை கடந்த வருடம் அதிகமாக வருமான … Read more

இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- முதல்வர்..!

இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாள் ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; … Read more

படையப்பா எழுந்து வா; பாட்ஷாபோல் நடந்து வா – வைரமுத்து ட்வீட்!

உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து … Read more

#Breaking:ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருவதாகவும்,ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு…!

நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ‘சாரகாற்றே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் உருவாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை … Read more

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்..!

அண்ணா அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களது  ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.