இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த ரஃபேல் போர் விமானங்கள்.. ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பு!

பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் இன்று பிற்பகல் வரவுள்ளது. இதன்காரணமாக, விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானம் தரையிறங்கும்போது வீடுகளின் மாடியில் இருந்து புகைப்படம் எடுக்கவும், அந்தப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

சிக்கலில் பிஜேபி…நெருங்கும் தேர்தல்…மீண்டும் வருகிறது ரபேல் விசாரணை…!!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் முறைகேட்டில் எந்த தவறும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த முன்வந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் முறைகேட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கின்றது.ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் … Read more

“வெடித்தது ரபேல் போர் விமான சர்ச்சை” பிரான்ஸ் முன்னாள் அதிபர் வெளியிட்ட தகவல்”பரிதாபத்தில் பாஜக..!!

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் … Read more