சிக்கலில் பிஜேபி…நெருங்கும் தேர்தல்…மீண்டும் வருகிறது ரபேல் விசாரணை…!!

  • ரபேல் போர் விமான ஒப்பந்தம் முறைகேட்டில் எந்த தவறும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த முன்வந்துள்ளது.

ரபேல் ஒப்பந்தம் முறைகேட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கின்றது.ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடக்கவில்லை நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

இந்நிலையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்த சீராய்வு மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த சீராய்வு மனுவில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த சீலிட்ட கவரில் வைக்கப்பட்ட விவரங்கள் பிரிக்கப்பட்டு இருந்தது , மேலும் உச்சநீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்ட காரணமாக இருந்த சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷணின் மனுவில் கூறப்பட்டு இருந்தது . தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருப்பது பிஜேபி_க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment