பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம்!

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பொங்கல் வைத்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். இன்றுடன் 102 நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இறுதி நேரத்தில் தற்பொழுது வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் பலரும் உள்ளே அழைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இன்று தை பொங்கல் திருநாளை ஒட்டி அனைத்து போட்டியாளர்களும் இணைந்து பொங்கல் வைத்து இரு … Read more

#BREAKING: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழக அரசு

பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற … Read more

புது பானையில் பொங்கல் கொண்டாட்டம்…!!

பொங்கல் விடும் போது  புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாமே எல்லாமே புதுசாக தான் இருக்கும். பொங்கல் விடும் போது சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகமானோர்  பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெங்கலப் பானையை பயன்படுத்துவார்கள். பொங்கல் விடும்  போது மொத்தம் இரண்டு அடுப்புகளில் பொங்கல் செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ… பொங்கல்…” என்று … Read more

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்…!!

தைப்பொங்கல் என்பது  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக    தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கபூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா மொரிசியஸ் என தமிழர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று உழைக்கும் மக்களின்  இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.