#BREAKING: 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் – பிரதமர் மோடி உத்தரவு

பொது விநியோக திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி உத்தரவு. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.26,000 கோடி செலவில் இலவச உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டியிருக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் … Read more

#BREAKING: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கையிருப்பு வைக்கக்கூடிய வகையில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம் உள்ளதால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் … Read more

#BREAKING: ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு.!

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் அவசர ஆலோசனை கூட்டம் சற்றுமுன் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 20 மாநிலங்களுக்கு தினமும் 6,785 … Read more

#BREAKING: ஆக்சிஜன் பற்றாக்குறை – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!

ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக … Read more

வெற்று பேச்சு வேண்டாம்!! இந்தியாவுக்கு ஒரு தீர்வு தேவை – ராகுல் காந்தி

இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார சவாலை மத்திய அரசு கையாண்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். 50 வயதான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், சில நாட்களாக அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார சவாலை மத்திய அரசு கையாண்டது குறித்து பேசிய அவர், கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி பிரதமர் மோடி உரையை குறித்துவைத்து … Read more

ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு 3 விலைகளா? – சோனியா காந்தி சரமாரி கேள்வி!

ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு 3 விலைகளா? என கேள்வி எழுப்பி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதத்தில், நாடு முழுதும் கொரோனா வைரஸ்  தாண்டவமாடிக கொண்டிருக்கும் நேரத்தில், மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த ஒரு தலைவரும் மக்கள் துயரப்படும் நேரத்தில் விலையை உயர்த்தி அவர்களை வதைக்க அனுமதிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார். ஒரு நிறுவனம் தயாரிக்கும் ஒரே தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுக்கு ரூ.400, … Read more

கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுதோல்வி – முக ஸ்டாலின்

கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்திருப்பது ஏன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜனை தட்டுபாடு இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஏற்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை … Read more

கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி – கே.எஸ்.அழகிரி

கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என கேஎஸ் அழகிரி விமர்சனம். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி அரசுகள் படுதோல்வி அடைந்துள்ளன என குற்றசாட்டியுள்ளார். கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் … Read more

#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. மருத்துவர்களுடன் இன்று மாலை பிரதமர் ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நாட்டின் சிறந்த மருத்துவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் … Read more

#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. இரவு 8 மணிக்கு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் … Read more