இன்றைய(ஏப்ரல் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில்  பெட்ரோல்  நேற்றைய விலையில் இருந்து  8 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.75.79 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து   லிட்டருக்கு ரூ.70.26 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.  

தளபதி 63 படத்தின் ஃபாஸ்ட் லுக் தேதி வெளியானது

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான  திரைப்படம் “சர்கார்”.இப்படம்   மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் குவித்தது. தற்போது விஜய் இயக்குனர் அட்லீ உடன் “தளபதி 63” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பரமாக நடந்தது வருகிறது. பெரும் பாலான படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன்காத்துக்கொண்டுஇருக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஃபாஸ்ட் லுக்கை … Read more

தேவராட்டம் சாதி படம் என தயாரிப்பாளர் கூறுகிறார்!இல்லை என கூறுகிறார் இயக்குனர்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படம் மே1 வெளியாகிறது. இந்நிலையில் நேற்று தேவராட்டம் படக்குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் … Read more

தளபதி 63 படத்தில் இணைந்த நடிகர் ஷாருக்கான்

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் “ராஜா ராணி ”  ,”தெறி ” , “மெர்சல் “ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அட்லீ விஜய் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயரை அட்லீ வெளியிடாத நிலையில் ரசிகர்கள் “தளபதி 63″என பெயர் வைத்து உள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா … Read more

போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிரட்டும் கொலைகாரன் படத்தின் ட்ரைலர்

விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர்  வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது ஒரு தலை காதலுக்காக பலரை கொலை செய்யும் கொலைகார கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அந்த கொலைகளை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்நிலையில் கொலைகாரன் படத்தின் ட்ரைலர் … Read more

Breaking News :டிக் -டாக் தடை நிபந்தனையுடன் நீக்கப்பட்டது

டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் … Read more

படப்பிடிப்பில் எலக்ட்ரீசியன் படுகாயம்! நேரில் சென்று நலம் விசாரித்த தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு “சர்கார்” திரைப்படம் வெளியானது.இப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு  மாபெரும் வெற்றியையும் ,வசூலையும் ,புகழையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடன் ” தளபதி 63″ படத்தில் மறுபடியும் இணைத்து உள்ளனர். இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜய் 63 படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் நடந்து வருகிறது.இந்நிலையில் பூந்தமல்லி அருகே  ” தளபதி 63″ … Read more

மகாமுனி படத்தின் புதிய அப்டேட்டை தனது ட்விட்டரில் வெளியிட்ட ஆர்யா

ஸ்டூடியோ கிரீன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரித்த படங்களில் பல பிரபலமான நடிகர்களின் படங்களையும் தயாரித்து உள்ளது . தற்போது பல படங்களை தயாரித்து வருகிறது. அதில் Mr லோக்கல், தேவராட்டம், ஆகிய படங்களை வரிசையாக தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஆர்யா நடித்து வரும் மகாமுனி எனும் படத்தையும் தயாரித்து உள்ளது. இப்படத்தை  இயக்குனர் சாந்தகுமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது டிவிட்டர் … Read more

“தேவி -2 ” திரைப்படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்றிதழ் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபு தேவா முன்னணி நடிகராகவும் ,இயக்குனராகவும் மற்றும் நடனக்கலைஞராகவும் வலம் வருகிறார்.இவர் நடிப்பில் தமிழ் சினிமாவில் பலவெற்றிபடங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவரை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை வழங்கினர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான “தேவி” படத்தில் பிரபு தேவா நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்தார்.இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து. “தேவி”படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி … Read more

விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதல்

விஜய் சேதுபதி வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரு படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார்.இந்த இரு படங்களில் “சேதுபதி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது  விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். அருண்குமார், விஜய் சேதுபதி கூட்டணியில்  மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு “சிந்துபாத்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த … Read more