Breaking News :டிக் -டாக் தடை நிபந்தனையுடன் நீக்கப்பட்டது

டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார் அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவு விட்டது.
இந்நிலையில் அந்த வழக்கு ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன், சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
டிக்-டாக் செயலி  நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். மேலும் நீதிமன்றம்  உத்தரவுக்கு பிறகு  பல லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் தடை இருப்பதால் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.

இந்த வழக்கை ஏப்ரல் 24-ம் தேதி ஒத்தி வைத்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை டிக் -டாக் தடை நிபந்தனையுடன் நீக்கியது.

மேலும் டிக் டாக் செயலியில் ஆபாச மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானால் அவமதிப்பு நடவடிக்கை சந்திக்க நேரிடும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் பெண்கள், சிறுவர்களை பாதிக்கும் வகையில் பதிவுகளை பதிவேற்றம் செய்ய மாட்டோம் எனவும், மேலும் பாலியல், சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையிலும் பதிவுகளை பதிவேற்ற மாட்டோம் என டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது.

author avatar
murugan

Leave a Comment