மத்திய அரசுக்கு பயப்படுகிறது அதிமுக -மு.க.ஸ்டாலின்

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று பேரவையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு  தொடர்பான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்தார். மேலும்  தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசுக்கு பயந்து தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற அதிமுக மறுப்பு தெரிவித்து விட்டது … Read more

என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  திமுக  15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாவது,என்பிஆர்-க்கு (தேசிய மக்கள் தொகை பதிவேடு) எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு  கூட்டம்-மேற்குவங்க அரசு புறக்கணிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு  கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேற்குவங்க அரசு பங்கேற்கவில்லை.   இந்தியா முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, மக்களின் விவரங்களை சேரிக்கும் வகையில் மக்கள் தொகை பதிவேடும் நடத்தப்படும்.ஆனால் பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை … Read more

பிரதமர் மோடி நேரடியாக  5 பேரிடம் விவாதிக்க வேண்டும்- சிதம்பரம் கோரிக்கை

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை  திருத்த  சட்டம் குறித்து நேரடியாக  5 விமர்சகர்களிடம் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை … Read more