மக்களின் உணர்வுகளை புரிந்து, தமிழக அரசு செயல்பட வேண்டும் – எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ரூ.3 உயர்த்தி இருப்பதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசை கண்டித்து அதிமுக அரசு பயப்படுவதாக விமர்சித்த அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு … Read more

எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன- முதலமைச்சர் பழனிசாமி

எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில், என்.பி.ஆருக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,   என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன.சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்.உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் என்று பேசினார். 

தமிமுன் அன்சாரி தலைமைச் செயலகத்தில் தர்ணா

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.அப்பொழுது ,என்பிஆர் தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.மேலும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.இந்நிலையில் என்பிஆர்  எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமைச் செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். 

என்.பி.ஆருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் தேவை – திமுக தலைவர் ஸ்டாலின்.!

என்.பி.ஆர் குறித்து மக்களிடம் அச்சம் நிலவி வருவதால், தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பினார். பாஜக கூட்டணி கட்சிகள் கூட, என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டார். மேலும் பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வரும் ஏப்ரல் 1ம் … Read more

தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு – திமுக வெளிநடப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று பேரவையில் என்.பி.ஆர் தொடர்பான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்தார். மேலும் என்.பி.ஆர்.-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.            

எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை, எனது அப்பாவுக்கு எப்படி வாங்குவேன் – தெலுங்கானா முதல்வர்

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR)  மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சட்டங்கள் தொடர்பான கவலைகளுக்கு பதிலளித்த தெலுங்கானா முதல்வர், எனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது, எனது தந்தையின் சான்றிதழை நான் எவ்வாறு தயாரிக்க முடியும் என கூறினார். இந்த திட்டம் என்னையும் … Read more

என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் – அம்மாநில அரசு முடிவு.!

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனை சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றம் செய்துள்ளனர். சிலர் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது எனவும் என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் ?முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அண்மையில் பீகார் மாநிலத்தில் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், பீகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் என்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது பரிசீலனையில் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி முக்கொம்பு அணை இடிந்து விழுந்தது. இதனால் புதிய அணை கட்டுவதற்காக … Read more

கலவரத்தில் கொல்லப்பட்ட தலைமை காவலர் குடும்பத்திற்கு ₹ 1 கோடி இழப்பீடு

டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசும், பா.ஜ.க.வும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி அரசு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 1 கோடி வழங்கும் என்று  தெரிவித்தார். இதுவரை மோதல்களில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்

தேர்வுக்குழுவுக்கு அனுப்பவில்லை,எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? ஸ்டாலின் அறிக்கை

வேளாண் மண்டல  மசோதாவை தேர்வுக்குழுவுக்கு  ஏன் அனுப்பவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.   காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யாத, திருச்சி-கரூர்-அரியலூர் … Read more