20 வயது பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசு வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

மைக்ரோசாப்ட்-இல் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அதனை தெரிவித்த இளம்பெண்ணுக்கு ரூ.22 லட்சம் பரிசுத்தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் அதிதீ சிங். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இந்த இளம் வயதில் இவர் இணைய பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேப் மை இந்தியாவின் பிழையை கண்டறிந்து தெரிவித்ததன் காரணமாக கல்வி ஆவணங்கள் இல்லாமல் இவரை பணியில் சேர்த்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூலில் இருக்கும் பிழையை கண்டறிந்து அதனை தெரிவித்துள்ளார். … Read more

விண்டோஸ் 11: அட்டகாசமான 10 புதிய அம்சங்கள்..!

விண்டோஸ் 11 என்ற புதிய தலைமுறை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு விண்டோஸ் 11 என்ற புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பியூட்டர் பயனர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல சிறப்பம்சங்களோடு இது தயாரிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இல் ஸ்டார்ட் மெனு இடது ஓரத்தில் இடம்பெற்றிருக்கும். தற்போது அறிமுகமாகியுள்ள விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்டார்ட் மெனு திரையின் நடுப்பகுதியில் வைத்துள்ளனர். இதன் மூலம் எளிமையாக தேவையானவற்றை … Read more

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக சத்யா நாதெல்லா நியமனம் ..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் தாம்சனுக்குப் பதிலாக நடெல்லா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2014 இல் பில் கேட்ஸுக்குப் பிறகு தாம்சன் மைக்ரோசாப்டின் தலைவரானார். சத்யா நாதெல்லா 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். இதன் பின்னர், லிங்க்ட்இன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் போன்ற … Read more

பயனர்களின் ஆதரவை இழந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர்…! மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு…!

25 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்த காரணத்தால், சேவையை நிறுத்த போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இன்று வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்தில், மக்களின் தேடுதல் அதிகமாக காணப்படுகிறது. மக்களின் தேடல்களுக்கு உடனடியாக எங்கு பதில் கிடைக்கின்றதோ அங்குதான் மக்களின் நாட்டமும் செல்கிறது. அந்தவகையில் கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்கள் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. இந்த பிரவுசர்களின் search engine மிகவிரைவாக … Read more

டிக்டாக்கை வாங்க முயற்சி! மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த வால்மார்ட். அமெரிக்கா – சீனா இடையே  ஏற்பட்ட மோதலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரபலமான டிக் டாக் செயலியை தடை செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட், டுவிட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் … Read more

அமெரிக்காவில் விரைவில் சீன ஆப்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்.! மைக் பாம்பியோ தகவல்.!

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாராம். அமெரிக்காவின், அந்நாட்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்ட மென்பொருள்களால், அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு … Read more

அமெரிக்காவில் டிக் டாக்கை விலைக்கு வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை தொடரும்- மைக்ரோசாஃப்ட்.!

சீனாவுக்குச் சொந்தமான பிரபல செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படும் என கூறிய நிலையில், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை … Read more

டிக் டாக் உடன் நடத்திய பேச்சு வார்த்தையை நிறுத்திய மைக்ரோசாப்ட்..?

அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். நேற்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அறிக்கையில்  டிக் டாக் செயலியை அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. எங்களது முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்வோம் என கூறப்பட்டது. அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படும் என கூறிய … Read more

பைட்டான்ஸின் புதிய ஒப்பந்தம்..டிக்டாக்கை கைப்பற்றும் மைக்ரோசாப்ட்..?

அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம் தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், டிக்டாக்கை அமெரிக்காவிலிருந்து தடைசெய்யயும்  ஆணையில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்ததாக என்.பி.சி செய்தி வெளியிட்டது. இதற்கிடையில்,  … Read more

அமெரிக்காவில் டிக்டாக் உரிமையை வாங்க முயற்சிக்கும் மைக்ரோசாப்ட்.?

 கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி இந்த நிலையில், அமெரிக்காவில் பாதுகாப்பு காரணமாக  டிக்டாக்  தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எழுந்து உள்ளது. மேலும், அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம்  தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும்  எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் … Read more