டிக் டாக் உடன் நடத்திய பேச்சு வார்த்தையை நிறுத்திய மைக்ரோசாப்ட்..?

அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

நேற்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அறிக்கையில்  டிக் டாக் செயலியை அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. எங்களது முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்வோம் என கூறப்பட்டது. அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படும் என கூறிய நிலையில், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த பேச்சு வார்த்தைகளை நிறுத்தியுள்ளது எனவும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதாக கூறி வெள்ளை மாளிகை ஆதரவைப் பெற பைட்டான்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக  வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சீனா அரசுக்கு அமெரிக்கர்களின் தகவல்களை அளிப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை டிக் டாக் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan