மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 18ஆயிரம் கனஅடியாக உயர்வு.!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலில் 10ஆயிரம் கன அடி தண்ணீர் ஜூன் 12 முதல் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 18ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது . எனவே அணை, சுரங்க, நீர்த்தேக்க மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 279.7மெகாவாட்டிலிருந்து 333.7 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,079 கன அடியாக குறைந்தது..!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,079 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது  . அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 7,079 கன அடியாக குறைந்தது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.94அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 62.20 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் பயன்பாட்டுக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,500கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு!

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள மிகப்பெரிய நீர் தேக்கமாக விளங்கும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். அதுபோல மேற்கு கால்வாய் மூலம் ஈரோடு, சேலம், … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி.. “மேட்டூர் அணையில் வரும் 17 -ம் தேதி முதல் நீர் திறப்பு” முதல்வர் உத்தரவு!

மேட்டூர் அணையில் குருவை சாகுபடிக்காக கிழக்கு மற்றும் மேற்கு கரையில் நீர் திறக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால், மேட்டூர் அணையில் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளிலிருந்து இம்மாதம் 17 -ம் தேதி முதல் டிசம்பர் 31 -ம் தேதி வரை நீர் திறக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரிப்பு.!

கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்து உள்ளது கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிதுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 90 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.7 அடி உயர்ந்து தற்போது 75. … Read more

தொடர் மழையால் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.!

தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 6563 கன அடியிலிருந்து 6864 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாகவும் … Read more

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு!

தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே கடந்த 15ம் தேதி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் 16 ஆம் … Read more

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.  

நாளை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.!

நாளை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 15 முறை மட்டுமே குறித்த தேதியான ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மற்ற வருடங்களில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் … Read more

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு – சேலம் மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை.!

மேட்டூர் ஆணை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை. மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக உள்ளது.  இதனால் குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் … Read more