மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 18ஆயிரம் கனஅடியாக உயர்வு.!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 18000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலில் 10ஆயிரம் கன அடி தண்ணீர் ஜூன் 12 முதல் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 18ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது . எனவே அணை, சுரங்க, நீர்த்தேக்க மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 279.7மெகாவாட்டிலிருந்து 333.7 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9160கன அடியாகவும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாகவும் உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 62.91 டிஎம்சியாகவும் உள்ளது.