40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுபானக்கடை.! 70 % வரை கடும் விலை உயர்வு.!

டெல்லியில், அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நாடு முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில், 40 நாட்கள் நிறைவடைந்து பிறகு, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்வைத்து பிரிக்கப்பட்ட ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன.  அதன்படி, டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுபிரியர்கள் ஆர்வத்துடன் … Read more

கிரிவலத்திற்கு செல்ல தடை.! திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  வருடந்தோறும் சித்திரை மாத பௌர்ணமியான சித்ராபௌர்ணமியில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வர்.  ஆனால், இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கிரிவலத்திற்கு பக்தர்கள் வர உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். … Read more

இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்யும் ராகவா லாரன்ஸ்..!

நடிகர் ராகவா லாரன்ஸ்  இளைஞர்களை பயன்படுத்தி சமூக சேவையை செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இதில் தென்னிந்தியா சினிமாயுலகில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை 4 கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கியுள்ளார்.மேலும் தாய் … Read more

திரைத்துறையினருக்கு குறைந்தபட்ச தளர்வுகளாவது அளிக்க வேண்டும்.!

திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று தமிழக அரசானது,  மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகளின் படி தமிழகத்திற்கும் பலவேறு தளர்வுகளை அறிவித்தது. அதன் படி, தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள், கட்டட தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் என பலவற்றுக்கு விதிமுறைகளோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  தற்போது அதே போல திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். மற்ற தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் போல … Read more

எலெக்ட்ரிஷியன், பிளம்பர் போன்ற சுயத்திறன் பணியாளர்கள் என்ன செய்யவேண்டும்?

எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.சி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், தச்சர்  போன்ற சுயத்திறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம் மத்திய உள்துறை அமைச்சகமானது, மே 4 முதல் அடுத்த 2 வாரங்களுக்கான சில தளர்வுகளை விதித்து நேற்று அறிவித்தது. அந்த தளர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து தமிழகத்திற்கான பல்வறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு … Read more

சலூன், அழகு நிலையங்களுக்கு அனுமதி கிடையாது.!

தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சலூன், அழகு நிலையங்களுக்கு அனுமதி கிடையாது. நாடு முழுவதும் வரும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்தபடி மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் சில … Read more

#Breaking: தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு அதாவது மே 17 வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. … Read more

ஒரு வேளை உணவிற்காக 4 கி.மீ தூரம் வரிசையில் நின்ற மக்கள்.! ட்ரான் மூலம் எடுக்கப்பட்ட காட்சி.!

தென் ஆப்ரிக்காவில் ஊரடங்கு காரணத்தால் ஒரு வேளை உணவிற்கு தவித்து வந்த ஏழை மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்ட அரசு, தனியார் அமைப்புகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சுமார் 22 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல நாடுகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவு இதுவரை 34,01,190 பேர் பாதிக்கப்பட்டு, 2,39,604 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவு காரணமாக பல்வேறு நாடுகளில் உள்ள அரசு மற்றும் … Read more

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

இன்று  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, நாளையுடன் முடிவடைய இருந்தது .ஆனால் நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்தது. மே 17 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.இதற்கு இடையில் மே 3 க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை முதல்வர் … Read more

கொடைக்கானலில் கோடை விழா ரத்து.! – ஆட்சியர் அறிவிப்பு.!

கொடைக்கானலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த கோடை விழாவானது இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நாளை மறு நாள் மே 3ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு,தளர்வு பற்றி இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தடைபட்டுள்ளன. தமிழகத்தில், பங்குனி, சித்திரை மாதங்களில்  நடைபெற இருந்த பல்வேறு விழாக்கள் … Read more