ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுதலாம்.! கர்நாடக அரசு முடிவு.!

Hijab Karnataka

கர்நாடகாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் , மாணவர்களிடத்தில் மிக பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட விவகாரம் என்றால் அது பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கூடாது என்ற விவகாரம் தான் . கடந்த வருடம் உடுப்பி அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத சென்ற போது கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இது பெரும் சர்சையாகவே , மாணவிகள் போராட்டம் கர்நாடக மாநிலம் பல்வேறு பகுதிகளில் … Read more

89வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.! 4 மாநிலங்களுக்கு அழைப்பு.!

Cauvery River

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை தமிழகம், கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து முடிவு எட்டப்படும். முதலில் காவிரி ஒழுங்காற்று மையம், மேற்கண்ட மாநில அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, நீர்நிலைகளில் இருப்புகளை அறிந்து எந்தளவு தண்ணீரை திறந்துவிடலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வெளியிடும். காவிரி ஒழுங்காற்று மையத்தால் மாநில அரசுகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. யாரும் … Read more

சொத்துகுவிப்பு வழக்கு : இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை.! டி.கே.சிவகுமார் குற்றசாட்டு.!

Karnataka Deputy CM DK Shivakumar

கர்நாடக துணை முதல்வரும் , அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 7.4 கோடி ரூபாய் கணக்கில் வராமல் இருந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து  சட்டவிரோத பணபரிவர்தனைகளை விசாரிக்கும் அமலாக்கத்துறையின் பரிந்துரையின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து தங்கள் விசாரணையை தொடர்ந்தது. இந்த சிபிஐ விசாரணையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது எனவே சிபிஐ விசாரணைக்கு தடை … Read more

கர்நாடகா: மதச்சார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் நீக்கம்!

CM Ibrahim

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில பதிவில் இருந்து இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கர்நாடகா முன்னாள் முதல்வர் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி கடந்த மாதம்  டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனை மதச்சார்பற்ற ஜனதா … Read more

13,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்.. இன்று அவசரமாய் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.! 

Kaveri River - Metur Dam

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது. தங்களது அணைகளில் போதிய அளவு நீர் இல்லை. அதனால் தங்களால் நீர் திறக்க முடியாது என தொடர்ந்து கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறது என்றும், சராசரி அளவில் அணைகளில் தண்ணீர் இருக்கிறது என்றும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே … Read more

பட்டாசு விபத்து: உயிரிழந்த 14 பேரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

attibele karnataka FIRE

தமிழக, கர்நாடக எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 உயிரிழந்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. பின்னர், தீ மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமாகியது. நேற்று முதல் மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், … Read more

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

FireAccident

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.  தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. தீ, மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் … Read more

#BREAKING:பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு 10 ஆக உயர்வு ..!

#Attibele

அத்திபெலேவில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலையில் அத்திபெலேயில் உள்ள பட்டாசு கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து … Read more

CauveryIssue : அக்டோபர் 12ஆம் தேதி கூடும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.!

cauveryIssue

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய அமைப்புகளிடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று … Read more

கர்நாடகாவில் பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார்! சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பேச்சு.!

சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மிகவும் இழிவான உரையாற்றியதற்காக தெஹ்சீன் பூனவல்லா, ஷிவமோகா எஸ்பி ஜி.கே. மிதுன் குமாரிடம் புகார் அளித்துள்ளார். கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஜாகரனா வேதிகேயின் மாநாட்டில் பங்குகொண்ட பிரக்யா சிங் தாக்கூர், விழாவில் பேசும்போது இந்துக்கள் தங்கள் பெண் குழந்தைகளை … Read more