அத்திப்பள்ளி பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.  தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது.

தீ, மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், இதில் பலரும் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பட்டாசு கடையில் 20 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வெடி விபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த 7 பேரிடம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தருமபுரியில் இருந்து பட்டாசுகள் கொண்டுவரப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.