ஜெய்ப்பூர்-டெல்லியில் இரண்டு அடுக்கு ரயில் அக்டோபர் 10 முதல் தொடக்கம்.!

ஜெய்ப்பூர்-டெல்லி பாதையில் இரண்டு அடுக்கு ரயில் வருகின்ற அக்டோபர் 10 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று வடமேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்தார். இந்த ரயில் தினமும் காலை 6 மணிக்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தை காலை 10.30 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இது டெல்லி சாராய் ரோஹில்லாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரை அடையும். இதற்கிடையில், மார்ச் மாதம் … Read more

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டடுபிடிப்பு.!

ஜெய்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெய்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இரண்டு அரிய மரபணு நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,இது உலகில் முதல் நோய் என்றனர். அந்த குழந்தைக்கு பாம்பே நோய் மற்றும் முதுகெலும்பு தசைநார் பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டதாக ஜே.கே.லோன் மருத்துவமனையின் ஒரு மருத்துவர் நேற்று தெரிவித்தார். பாம்பே நோய் வளர்சிதை மாற்றத்தின் ஒரு அரிதான பிறப்பு பிழை … Read more

ஜெய்ப்பூரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கும்,  இதனால், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள … Read more

ராஜஸ்தான் அரசியல்.. ஜெய்ப்பூரில் நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில்,  பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை விசாரணையில் 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு … Read more

விவசாயிகள், தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு நூதன முறையில் போராட்டம்.!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலங்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி விவசாயிகள், கழுத்தளவு ஆழக் குழிக்குள் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெய்ப்பூர் அருகே வீடு கட்டும் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஜமீன் சமாதி சத்யாகிரகம் எனும் இந்த போராட்டத்தில் தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான … Read more

லாரி மீது பேருந்து மோதி விபத்து.! பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு.!

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் 20 பேர் இறந்தனர். இந்த விபத்தில் இறந்த குடும்பத்தில் இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை நோக்கி 45 பயணிகள் கொண்டு ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது இந்த பேருந்து கணோஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து எதிர்பாராதவிதமாக லாரி மீது … Read more

10 வயது சிறுமையை கம்பியால் அடித்து கொன்ற 12 வயது சிறுமி! ஒரு பேனாவால் நடந்த விபரீதம்!

பள்ளியில் பேனாவை எடுத்து சென்றதற்காக 10 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டு கம்பியால் தாக்கி 12 வயது சிறுமி கொலை செய்துவிட்டார்.  அதனை மறைக்க 12 வயது சிறுமியின் பெற்றோர் முயற்சி செய்ததால் அவர்களும் தற்போது கம்பி எண்ணுகின்றனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் பயின்று வருகிறார் 12 வயதான ரேஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எனும் சிறுமி. இதே பள்ளியில் ஒரு 10 வயது நிரம்பிய சிறுமியும் படித்து வந்துள்ளார். அந்த … Read more

21 வயதில் நீதிபதியான வாலிபர்..!

ஜெய்ப்பூரை சார்ந்த மயங்க் பிரதாப் சிங் (21).இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து உள்ளார்.இந்த இளநிலை சட்டப் படிப்பு இந்த வருடத்துடன் முடிந்து உள்ளது. இந்நிலையில்  நீதித்துறை பணிக்கான தேர்வை மயங்க் பிரதாப் சிங் எழுதியுள்ளார். நீதித்துறை பணிகளுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது.  பின்னர் வயது 21 ஆக குறைக்கப்பட்டது.இதனால் மயங்க் பிரதாப் சிங்  நீதித்துறை பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிய பிரதாப் சிங்  … Read more

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற பெண்..! பிறகு நடந்த சோகம்..!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு நேற்று காலை பிரசவம் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார். அனைத்து குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தால் அனைவரும் எடை குறைந்து உள்ளனர்.அதில் ஒரு ஆண் குழந்தை இறந்து உள்ளது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து  பெண் … Read more

நடு இரவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனின் நாக்கை கடித்து தப்பித்த பெண்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு இளம் பெண் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். அந்த காரில் ட்ரைவரை தவிர வேறு ஒரு ஆணும் இருந்துள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய இருவரும் முயன்றுள்ளனர். இதில் தைரியமாக செயல்பட்ட அந்த பெண் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, ஒருவரின் நாக்கை கடித்து தப்பித்து சென்றுவிட்டது. பிறகு போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். மேலும், தனது … Read more