21 வயதில் நீதிபதியான வாலிபர்..!

ஜெய்ப்பூரை சார்ந்த மயங்க் பிரதாப் சிங் (21).இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து உள்ளார்.இந்த இளநிலை சட்டப் படிப்பு இந்த வருடத்துடன் முடிந்து உள்ளது.
இந்நிலையில்  நீதித்துறை பணிக்கான தேர்வை மயங்க் பிரதாப் சிங் எழுதியுள்ளார். நீதித்துறை பணிகளுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது.  பின்னர் வயது 21 ஆக குறைக்கப்பட்டது.இதனால் மயங்க் பிரதாப் சிங்  நீதித்துறை பணிக்கான தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு எழுதிய பிரதாப் சிங்  தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் அவர்களுக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் , “முதல் முயற்சியில் நீதித்துறை தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு  நன்றி. வயது குறைக்கப்பட்டதால் தான் நான் இந்த தேர்வை எழுத முடிந்தது. அதிகமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்காக  கண்டிப்பாக கடினமாக உழைப்பேன்” என கூறினார்

author avatar
murugan