இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்லும்…. சச்சின் தெண்டுல்கர் கருத்து….

நடப்பு 13வது ஐபிஎல் சீசன் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிகெட் ஜாம்பவானுமான  சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். … Read more

மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து… 8பேர் பலி …

மஹாராஷ்டிரா  மாநிலம் தானே அருகே உள்ள பிவாந்தி நகரில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். ,மேலும்  பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி 25க்கும் அதிகமானோர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாஹாராஷ்டிரா மாநிலம் பிவாந்தியில் உள்ள ஜிலானி என்ற 3 அடுக்குமாடி குடியிருப்பு இன்று (செப்டெம்பர் 21) அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த அடுக்குமாடி கட்டடத்தில் 21 தளங்கள் இருந்தன.இந்த துயர  சம்பவம் அதிகாலை நடந்தது … Read more

கொரோனா தளர்வு முடிந்த பின்னரும் 2 கோடி பெண் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாது… மலாலா தகவல்…

தலீபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான நோபல் பரிசு பெற்ற யூசுப்சாய் மலாலா சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். தற்போது நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மலாலா அங்கு  அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும், நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் … Read more

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்… சபாநாயகர் மீது புத்தகத்தை வீசி எறிந்ததால் பரபரப்பு…

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய இரண்டு  வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நேற்று நிறைவேற்றப்பட்டன. கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை கிழித்து எறிந்து, அவைத் தலைவர் மீது விதி புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்புக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு … Read more

ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் தாஜ்மகால்….

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்த நிலையில் தர்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஆறு மாதங்களுக்குப் பின், இன்று திறக்கப்படுகிறது. தாஜ்மஹால், கடந்த  மார்ச், 17ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், புராதனச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனினும், தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் திறக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின், … Read more

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி….

தமிழக துணை முதல் அமைச்சரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் முதல்வர் இந்நாள் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியம் அல்லது மாலை துணை முதல்வர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.  ஏற்கனவே, கடந்த மே 25 ஆம் … Read more

பெருகும் இணைய வழி பணப்புழக்கம்… சைபர் குற்றங்கள் அதிகரிப்பு… தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து…

இந்தியாவில் தற்போது  சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இணையம் மூலம்  நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காரணமாக மக்களின்  ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். எனவே டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்த சூழலை பயன்படுத்தி … Read more

ஒரே நாடு ஒரோ ரேஷன் கார்டு திட்டம் அடுத்த மாதம் தொடங்கிவைப்பு… அமைச்சர் காமராஜ் தகவல்…

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களிலே உள்ளதால், அதற்கான வேலைகளில் ஆளும், எதிர் மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “6 மாதத்தில் விடியல் பிறக்கும்” என்று பதிவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் … Read more

சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தோ-பசுபிக் நாடுகளுக்கு அமெரிக்கா உதவும்…அமெரிக்கா செனட் கமிட்டி அறிவிப்பு…

சீனவின்  அராஜக ஆதிக்கத்தை தடுக்க இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான செனட் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், கிழக்கு ஆசிய மற்றம் பசிபிக் பகுதிகளுக்கான வெளியுறவு துணை அமைச்சர், டேவிட் ஸ்டில்வெல் கூறியதாவது, இந்தோ – பசிபிக்  பகுதி மிகவும் பதற்றமாகவே  உள்ளது. இதில் இந்திய பெருங்கடல், மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதிகள், தென் சீன … Read more

ஐ.நாவின் 75ஆவது ஆண்டு கூட்டம்… இந்திய பிரதமர் சிறப்புரை…

ஐக்கிய நாடுகள்  பொதுசபையின் வருடாந்திர கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐ.நா.வின் 75-வது ஆண்டு என்பதால் அதன் நினைவாக நாளை உயர்மட்ட கூட்டம் நடக்கிறது. அதில் ‘நாம் விரும்பும் எதிர்காலம், நமக்கு தேவையான ஐ.நா.: பன்முகத்தன்மைக்கான நமது கூட்டு உறுதிப்பாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளும் ஒரு தொலைநோக்கு அரசியல் பிரகடனத்தை ஏற்றுக்கொள்கின்றன. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந்தேதி வரை பொது சபை கூட்டம் … Read more