தூத்துக்குடி அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிசேகத்தின் போது கிடைத்த பழைமையான நாணயங்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஜிஜி காலனி பகுதியில் உள்ள அளத்து பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இக்கோவிலின் கும்பாபிசேகமானது நடைபெற்றது. அப்போது கோவில் கருவறையில் உள்ள அம்மன் சிலைகளை நகட்டும் போது 1835ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆங்கில அரசாங்கத்தின் பழைமையான நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.  

தமிழ் நாட்டிலிருந்து 1200 பழங்கால சிலைகள் கடத்தல்- அறநிலையத்துறை கண்டுபிடிப்பு

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 1200 பழங்கால சிலைகளை கடத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 1992ல் இருந்து 2017 வரை இந்த கடத்தல் நடந்துள்ளதாக தெரிகின்றது. மேலும் இதில் 350 சிலைகளின் தகவல்கள் தெரியவில்லை என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 18 சிலைகளை கண்டுபிடித்ததாகவும் 50 சிலைகள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.