அதிரடி…494 கஞ்சா வழக்குகள்;முதல் முறையாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கம் – தென்மண்டல ஐஜி எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்திருந்தது.இதுபோன்று,6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும்,கஞ்சா பதுக்கல்,விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்கு,சொத்துக்களை முடக்க காவல்துறை உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், … Read more

மும்பை : 15 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய 2 பேர் கைது …!

மும்பையில் 15 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருளை கடத்தி சென்ற இருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானில் வசித்து வரக்கூடிய இந்த இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதை பொருளை கடத்தி விற்பனை செய்வதற்காக மும்பை வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இது குறித்து தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் மும்பை போதை பொருள் … Read more

21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது…!

21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்திய சென்னை தம்பதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா எனும் துறைமுகத்தில் 3000 கிலோ எடை உள்ள சுமார் 21,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதிகள் இருவரை வருவாய் புலனாய்வு துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆந்திர நிறுவனம் ஒன்றிலிருந்து … Read more

பொய் பாலியல் புகாரில் தங்கக் கடத்தல் ராணி சொப்னா மீண்டும் கைது!

பொய் பாலியல் புகாரில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்காக  கைது செய்யப்பட்டவர் தான் சொப்னா. இவர் அமீரகத் பணியில் சேர்வதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபுவுக்கு எதிராக … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.!

சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த சென்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏர் கார்கோ சரக்கு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, பார்சல்களில் டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருப்பதாக தெரிந்தது. … Read more

மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய பயணிகள்! 2 பேரை கைது செய்த போலீசார்!

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில்,  52 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தங்களது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் ஆவார்கள். இவர்கள் இருவரும், துபாயில் இருந்து டெல்லி வந்த போது பிடிபட்டனர். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், 1.14 கிலோ எடையுள்ள தங்கத்தை மலக்குடலில் பேஸ்ட் வடிவத்தில் மறைத்து வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மறைத்து வைத்திருந்த தங்கத்தின் மதிப்பு  … Read more

தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வாலிபர் வழிப்பறி வழக்கில் கைது…

தேசிய குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்ற வாலிபர் உட்பட மூன்றுபேரை, வழிப்பறி வழக்கில், திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அடிக்கடி வழிப்பறிகள் நடந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இது தொடர்பாக, அரசராஜன், (19) கதிரேசபிரபு, (20),  மற்றும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, பாலமுருகன், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதி, பி.எஸ்சி., பட்டதாரியான பாலமுருகன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெற்றோருடன் … Read more

சந்தனமர கடத்தல் தொடர்பான தகவல் கசிவு – 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட்!

சந்தனமர கடத்தல் தொடர்பான தகவலை குற்றவாளிகளுக்கு கொடுத்ததால் 2 பெங்களூர் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தன போதை மருந்து தொடர்பான தகவல்களை குற்றவாளிகளுக்கு பகிர்ந்து கொண்டதாக பெங்களூரை சேர்ந்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பணத்தை வாங்கிக்கொண்டு கடத்தல்காரர்களிடம் இரண்டு காவலர்கள் சந்தன மரம் தொடர்பான தகவல்களை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் அவர்கள் கூறுகையில், இரண்டு காவல் துறையினரும் சந்தன கடத்தல் தொடர்பான … Read more

கேரள தங்கம் கடத்தல் கும்பல்! ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை! கைதாக வாய்ப்பு!

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் இன்று என்ஐஏ விசாரணை. கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கராணி சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு, இந்த கும்பல்களுடன்  தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, … Read more

23 ஆண்டுகளுக்கு பின் மும்பை போலீசாரிடம் பிடிபட்ட வைர கடத்திய நபர்!

23 ஆண்டுகளுக்கு பின் மும்பை போலீசாரிடம் பிடிபட்ட வைர கடத்திய நபர். பரேஷ் ஜாவேரி சிங்கப்பூரிலிருந்து மூல தங்கம் மற்றும் வைரங்களை இறக்குமதி செய்வார். ஆனால் வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், ஒரு விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. அந்த நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாக இருந்துள்ளார். இதனையடுத்து,  53 வயதான  பரேஷ் ஜாவேரி  மும்பை போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார், 23 ஆண்டுகளுக்குப் … Read more