சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை – நாளை சிபிஐ விசாரணை!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக  சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, … Read more

சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை! நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்!

சாத்தான்குளம் தந்தை மகன்  கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சாத்தான்குளம் தந்தை மகன்  கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. மேலும், வியாபாரிகள் ,பொதுமக்கள்,உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் … Read more

தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம்.! ஒன்று கூடி நீதி கோரும் பிரபலங்கள்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு நீதி கோரி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபலங்கள் பலர் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க … Read more