விவசாயிகள் கூடாரங்கள் மீது கற்கள் வீச்சு.. கண்ணீர் புகைகுண்டு வீசிய போலீசார்..!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதத்திற்கு மேலாக விவசாயிகள போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் அறிவித்தனர். அதன்படி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், ஒருதரப்பு விவசாயிகள் அனுமதி கொடுத்த நேரத்திற்கு முன்னதாகவே டிராக்டர் பேரணியை தொடங்கியதால், போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு … Read more

டெல்லி வன்முறையில் செங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த பொருட்கள் சேதம்…!

டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டெல்லியில்  டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் கோட்டைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக … Read more

நடிகர் தீப் சிந்து மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு..!

டெல்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், தீப் சிந்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு.  தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பஞ்சாப் நடிகரான தீப் சிந்து அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் இவர்களை விவசாய சங்கத்தினர் தங்கள் பக்கம் … Read more

வேளாண் சட்டம்: உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தில் தெரிவிக்கலாம்.!

மூன்று வேளாண் சட்டங்களை குறித்து விமர்சனம், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு அழைப்பு விடுத்துள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு மற்றும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் நிபுணர்கள் குழுவை nநியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 3 புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் விவசாய தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் இருந்து கருத்துக்கள், விமர்சனங்கள் கேட்கப்படுகிறது. இதன்மூலம் இந்திய … Read more

தேசிய கொடி அவமதிப்பு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை மேற்கொண்டனர். இந்த பேரணி அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடியடி … Read more

வன்முறையில் 394 போலீசார் காயம்., சிலர் ஐசியூவில் அனுமதி – கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 394 போலீஸ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அனுமதித்த நேரத்திற்கு முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியது. இதனால் விவசாயிகளுக்கு, போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. செங்கோட்டையை முற்றிகையிட்ட விவசாயிகள், அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகளின் கொடி ஏற்றினர். பின்னர் வன்முறை தீவிரம் காரணமாக காவல்துறை தடியடி நடத்தப்பட்டது. … Read more

டெல்லி வன்முறை: போராட்டம் நடத்தும் ஒரு அமைப்பு வாபஸ் பெற்றது.!

டெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம் வாபஸ் பெறுவதாக வி.எம்.சிங் தெரிவித்துள்ளார். வன்முறை போராட்டங்கள் தங்களுக்கு ஏற்புடைத்தல்ல என ஒருங்கிணைப்புக் குழுவின் சர்தார் வி.எம்.சிங் செய்தியர்களிடம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராடி வரும் நிலையில், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். விஎம் சிங் கடந்த மாதம் AIKSCC-இன் தேசிய கன்வீனர், பண்ணை … Read more

போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை! பிரபல நடிகை ட்வீட்!

விவசாயிகள் போராடுவது சரியில்லை. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை. போலீசார் விவசாயிகளுக்கு பதிலடி கொடுப்பதும் தவறில்லை. போலீசாரும் மனிதர்கள் தான். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 கடந்த மாதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வந்த நிலையில், விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கு இடையே தள்ளு  ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் விவசாயிகளை சரமாரியாக அடித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரின் இந்த அராஜக செயலை கண்டித்து, பிரபலங்கள் பாலரும் கண்டனம் … Read more

மீண்டும் எல்லைகளுக்கு திரும்புங்கள் – பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்ப வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். அனுமதித்த நேரத்திற்கு முன்பே பேரணி தொடங்கி டெல்லியில் நுழைந்ததால், காவல்துறை கண்ணீர் வெடிகுண்டு வீசியுள்ளது. போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வன்முரை தீவிரமடைந்ததை அடுத்து டெல்லி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, இன்று நள்ளிரவு முதல் … Read more

#BREAKING: டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கிய விவசாயிகள்..!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினார். டெல்லி- ஹரியானா எல்லையான சிங்குவில் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு  டெல்லியை நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கினர். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை 11 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால், குடியரசு தினமான … Read more