கிரிக்கெட் வீரர்களை பிரச்சாரத்திற்கு நிர்பந்திக்க வேண்டாம் – கார்த்திக் சிதம்பரம்.!

கிரிக்கெட் வீரர்களை ட்விட்டர் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்று, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசாமல் இருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். why aren’t we talking about this?! … Read more

விவசாயிகளை நேரில் சந்திக்க சென்ற தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்.!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்திய காவல்துறை. புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை சந்திக்க காசிப்பூர் சென்ற தமிழக எம்பிக்களை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. டெல்லி – உத்தரபிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதால் எம்பிக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனிமொழி, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், ரவிக்குமார், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவசாயிகளை சந்திக்க பேருந்தில் சென்று … Read more

பார்வையாளர்களாக இருக்கலாம், ஆனால் பங்கேற்க முடியாது – சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு

இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க இயலாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கூறி, வேளாண் சட்டங்கள் எதிர்த்து விவசாயிகள் போராட்டம் மற்றும் டெல்லி … Read more

#BREAKING: விவசாயிகள் போராட்டம் – உயர்மட்ட குழுவுடன் பிரதமர் ஆலோசனை.!

விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டவில்லை. மேலும், நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர … Read more

தீப் சித்து குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு – டெல்லி போலீசார்

டெல்லி போலீசார் , தீப் சித்து பற்றிய தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசும், மற்ற நான்கு பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ 50,000 பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிற நிலையில், இதற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் தீப் சித்து என்பவரும் … Read more

அவர்கள் விவசாயிகள் அல்ல….! பொறுமையாக இருங்கள் முட்டாள்களே…! – கங்கானா ரனாவத்

அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களிடம் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்து … Read more

எதிர்க்கட்சி தொடர் அமளி – மீண்டும் மாநிலங்களவை ஒத்திவைப்பு.!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின்  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற்ற இரு அவைகளில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார். பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர். இந்நிலையில், இன்று தொடங்கிய மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க … Read more

டெல்லி வன்முறை : இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு…!

இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கு, காசிப்பூர் மற்றும் திகிரி அவற்றின் அருகில் உள்ள எல்லைப் பகுதிகளில் இணைய சேவை ஜனவரி 31ஆம் தேதி இரவு 11 மணிவரை துண்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக … Read more

மத்திய அரசு வேளாண் சட்டங்களை நீக்காவிட்டால் மற்ற மாநிலங்களிலும் போராட்டம் பரவும்! ராகுலின் ட்வீட்டிற்கு ஸ்மிருதி ராணி பதிலடி..!

ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார். தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது … Read more

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் இணைய சேவை துண்டிப்பு!

டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தம்.  வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவாசயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில், காவல்துறையினரும், விவசாயிகளுக்கும் இடையே  கலவரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை … Read more