#FakeNews: மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய போலியான தகவல்கள்.!

மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பயணிகளின் கொரோனா சோதனை குறித்த செய்தி சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இது தவறான தகவல் … Read more

‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை கட்டுப்படுத்திய ரஷ்யா!

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, ‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. இணையதளங்களை முடக்கும் ரஷ்யா: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களின் மீதான தனது கட்டுப்பாட்டை கணிசமாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள் நியூஸ் சேவைக்கு கட்டுப்பாடு: இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் பற்றிய “தவறான” … Read more

போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகள் தேவை – உச்சநீதிமன்றம்!

போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது. கொரானா அதிகரித்து இருப்பதாக தப்லிக் ஜமாத் உறுப்பினர்களால்  தான் என ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்ட கூடிய செயல் என அனைவராலும் கூறப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் மூலமாக பரவக்கூடிய போலி செய்திகளை கையாள்வதற்கு ஒரு ஒழுங்குமுறையை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட … Read more

கொரோனா குறித்து அதிகமான தவறான தகவலை வெளியிட்டது அதிபர் ட்ரம்ப்! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா குறித்த கட்டுரைகளை ஆய்வு செய்ததில், 38 சதவீத தவறான தகவல்களை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அளித்துள்ளார் என்றும்,  அவர் தான் கொரோனா குறித்து, உலகிலேயே அதிகமான தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும்  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு இயக்குனரான சாரா இவானேகா கூறுகையில், ‘உலகிலேயே கொரோனா … Read more

பிரபல இயக்குநரின் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி.!

பிரபல இயக்குநரான கார்த்திக் நரேனின் படத்தில் வாங்கி தருவதாக வாட்ஸ்அப்பில் மர்ம நபர் ஒருவர் பண மோசடி செய்வதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது. அதனை தொடர்ந்து அருண் விஜய், … Read more