போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகள் தேவை – உச்சநீதிமன்றம்!

போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது.

கொரானா அதிகரித்து இருப்பதாக தப்லிக் ஜமாத் உறுப்பினர்களால்  தான் என ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்ட கூடிய செயல் என அனைவராலும் கூறப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் மூலமாக பரவக்கூடிய போலி செய்திகளை கையாள்வதற்கு ஒரு ஒழுங்குமுறையை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களிலிருந்து கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததாகவும் சில சமூக ஊடகங்களில் #coronajihath போன்ற ஹேர்ஸ்டைல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சில ஊடகங்கள் முஸ்லிம்களை மனம் குண்டு அல்லது மனித குண்டு என பெயரிட்டு அழைத்ததாகவும் இஸ்லாமிய மிஷனரி கூட்டத்தில் இது குறித்து பேசபட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறான தகவல்களை பரப்ப கூடிய ஊடகங்களை கையாள்வதற்கான வழிமுறைகள் வெளியிட வேண்டுமென மத்திய அரசை நோக்கி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal

Leave a Comment