வாக்கு எண்ணிக்கை: நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம்.!!

சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்.  தமிழம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.79% வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், … Read more

வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை – கமல்ஹாசன்

வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை என்று கட்சியினருக்கு கமல்ஹாசன் கடிதம். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள், ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய … Read more

வாக்கு எண்ணிக்கை: 35,836 போலீசார் பாதுகாப்பு…5,64,253 தபால் வாக்குகள் பாதிப்பு – சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலகர்களுக்கு பதிலாக மாற்றும் அலுவலர்கள் … Read more

பண மூட்டைகளையும், பொய்மூட்டைகளையும் கடந்து நாம் தனி முத்திரையைப் பதிக்கப் போகிறோம் – டிடிவி தினகரன்

வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்கு எண்ணிக்கையில் அமமுகவினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி கழகம் தனி முத்திரை பதிக்கப் போகிறது. போலிகளை அடையாளம் காட்டி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான வழித்தோன்றலாக பிரகாசிக்கப் போகிறோம் என கூறியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நாளை … Read more

அடுத்த முதல்வர் யார்? நாளை வாக்கு எண்ணிக்கை – என்னென்ன கட்டுப்பாடுகள், முன்னேற்பாடுகள்?

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.79% வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேறப்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவான … Read more

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும் – ஓபிஎஸ், இபிஎஸ்

வாக்கு எண்ணிக்கையின்போது கட்சியினரும், தோழமை காட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கூட்டு அறிக்கை. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், கருத்து கணிப்புகள் எந்தவித மனசோர்வை தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம். அதிமுக … Read more

அமைச்சரவையில் 50% பெண்கள்.. நாளை மறுநாள் தேர்தல் முடிவு.. இன்று சீமான் அறிக்கை!!

நாம் தமிழர் ஆட்சியின் அமைச்சரவையில் 50% பெண்களுக்கு இடம் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியீடு. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் அளப்பரிய நம்பிக்கையை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. நம் இனத்தின் அரசியல் அங்கீகரித்திற்காக கடும் உழைப்பை சிந்தி பாடுபட்டது ஒருபோது வீண்போகாது என கூறியுள்ளார். யாரும் செய்ய துணியாத புரட்சிகர செயல்களை இந்த தர்தலில் நாம் துணிந்து … Read more

#BREAKING: தேர்தல் வெற்றி – ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்றது. அதில், 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஊர்வலம், பட்டாசு வெடிக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 2ம் … Read more

#BREAKING: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை!- உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2 ஆம் தேதி எண்ண தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியை நிறுத்தக்கோரிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அற்ப காரணங்களுடன் … Read more

#breaking: மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு – தமிழக அரசு

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தாக கூறப்படுகிறது.  தொழிலாளர் தினத்துக்கு பொதுவிடுமுறை என்பதால் மே 1ல் சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை என்றும் கூறியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போடுவதால் சனிக்கிழமை … Read more