மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவிதித்துள்ளார். இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது .இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்படும் . மேலும் மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும்.கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக, 5 … Read more

ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது-கார்த்தி சிதம்பரம்

9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார். சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் … Read more

சிதம்பரத்தால் நாட்டுக்கு என்ன பயன்?அவரால் பூமிக்குத்தான் பாரம்-முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

சிதம்பரத்தின் கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். சத்திய மூர்த்தி பவனில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்  பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார். சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி … Read more

ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் கூரம்பாக்கத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், மழைநீர் சேகரிப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்படுகிறது.நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரி, ஆறுகளை மீட்டெடுக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது .சென்னையில் 53 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது, நீர்நிலை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் … Read more

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து 27 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் முதலமைச்சரின் பிரச்சார பயணம் தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வேலூரில், வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிகளில், ஏ.சி.சண்முகத்தை … Read more

எடப்பாடி நகராட்சியில் ரூ32.40 லட்சம் மதிப்பில் 18 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது-முதலமைச்சர் பழனிசாமி

எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சேலம் எடப்பாடி நகராட்சியில் ரூ32.40 லட்சம் மதிப்பில் 18 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தாதாபுரம் வழியாக புதிய வழித்தட பேருந்து துவக்கம். அறிவுத்திறனை வளர்க்கவே மாணவ, மாணவிகளுக்கு அரசு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும். மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தொடர்ந்து அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும். உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்று … Read more

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பில்,  “5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.சேதமடைந்த சாலைகள், பாலங்கள் 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்.புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும்”.. இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ரூ 2,515 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினர் முதல்வர்!

2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் 16 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார். எக்கி ஹேமா பிரைவேட் லிமிடெட், சிர்மா டெக்னோலஜி பிரைவேட் லிமிடெட், ரெனேட்டஸ் பிறைகான் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைத்தார். அதே போல் காஞ்சிபுரம் … Read more

“முதல்வர் பதிலளிப்பதை கண்டு நான் அசந்துள்ளேன் ” துரைமுருகன் புகழாரம்!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை கண்டு நானே பலமுறை அசந்து போய் உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தது என்று சபாநாயகர் அறிவித்ததும் குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் அவையில் கேள்வி நேரம் குறைக்க வேண்டும் என்று நன் கேட்டேன், நீங்கள் முடியாது என்று கூறினீர். ஆனால் , அந்த நீண்ட நேர கேள்வியின் பொது முதல்வரின் சம்பத்தப்பட்ட துறைகளுக்கு மட்டும் … Read more

எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியீடு

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக  வளாகத்தில் நடைபெற்ற விழாவில், எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.