இங்கிலாந்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி

இங்கிலாந்தில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை  முதலமைச்சர்   பழனிசாமி பார்வையிட்டார். முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது  இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர்  பழனிசாமி சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார். காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் … Read more

வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் !சென்னையில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி

வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . இதற்காக  முதலமைச்சர் பழனிசாமி இன்று  ( 28-ஆம் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்கிறார். அங்கிருந்து செப்டம்பர் 1-ஆம் தேதி புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் … Read more

அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது-முதலமைச்சர் பழனிசாமி

அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. இதன் பின் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது . கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி … Read more

நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கருக்கு ரூ.600 மானியம்-முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்க  உத்தரவு பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,காவிரி டெல்டா விவசாயிகள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேட்டூர் அணையில்  சமீபத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். 5,00,000 ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் … Read more

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு-முதல்வர் பழனிச்சாமி

சேலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தட்டுபாட்டை நீக்க 22 கோடி ரூபாய் ஒதுக்கி, குழாய்கள் மாற்றப்படும் தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள் குடிமாரமுத்து திட்டத்தின் நீர் நிலைகள் தூர்வாரப்படும். விவசாயிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விளையாட்டு துறையை மேம்படுத்த 3 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்தது தமிழக அரசு .தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாலமாக திகழ்கிறது தமிழக அரசு … Read more

திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் -முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருக்கும் போது, டயர் வெடித்து கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தார்கள் மற்றும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் … Read more

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது-முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறப்பு விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், நீதிமன்றங்களை கணினி மயமாக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும். தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.கடந்த 8 ஆண்டுகளில் நீதித்துறை உட்கட்டமைப்பை … Read more

Breaking News : திருப்பத்தூர் , ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டமாக அறிவித்தார் -முதலமைச்சர் பழனிச்சாமி !

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலீசார் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டு.  முதல்வராக பதவியேற்று எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். பின்னர் பேசிய முதலமைச்சர் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயர்ந்து உள்ளது. மேலும் கே .வி … Read more

கனமழையால் நீலகிரி மற்றும் கோவையில் பாதிப்பு !முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை

நீலகிரி மற்றும் கோவையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக முதலமைச்சர்  பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்காரணமாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து  வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நேற்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நீலகிரியில் ஆய்வு … Read more

ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை ஆகும்.போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் – 118, விழுப்புரம் -18, சேலம் – 60, கோவை – 16, கும்பகோணம் – 25, மதுரை – 14, நெல்லை – 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.