புரட்டி போட்ட புயல் : ரூ 1,200,00,00,000 நிவாரணம் முதல்வர் வேண்டுகோள்..!!

தித்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார் வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!!

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் காற்றின் திசை மாறிய பிறகு, வரும் 15-ஆம் தேதி அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. DINASUVADU 

"3,00,000 மக்கள் காலி" புரட்டி போட்ட மைக்கேல் புயல்…!!

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயல் புளோரிடா மாகாணத்தை  தாக்கியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து புளோரிடா அதிகாரிகள் தரப்பில், “புளோரிடாவில் புதன்கிழமை 125 கிலோமீட்டர் வேகத்தில் மைக்கேல் புயல் அம்மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் ஒருவர் பலியானார். இந்த புயல் காரணமாக மின்சார கம்பிகள் பல இடங்களில் அறுத்து விழுந்ததால் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் … Read more

கரையை கடந்தது "டிட்லி" புயல் ..!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிஸா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு  மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புயல் எச்சரிக்க … Read more

தித்லி புயல் : "3 நாள் கனமழை" வானிலை மையம் எச்சரிக்கை ..!!

தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி உள்ளதால் ஒடிசா மற்றும் ஆந்திராவிற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  தித்லி புயல் காரணமாக ஒடிசாவில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் … Read more

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு…!

ஓகி  புயலால் பாதித்த தமிழகத்திற்கு 2ம் கட்டமாக ₹561 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.அதேபோல் கேரள மாநிலத்திற்கும் 2-ம் கட்டமாக ₹513 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து விடுவித்துள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியுதவியை விடுவித்தது மத்திய அரசு. source:dinasuvadu.com