5 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

நெல்லை மாவட்ட முதலாவது அமர்வு குற்றவியல் நீதிமன்றம், 5 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது.  நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதியன்று இசக்கியப்பன் வீட்டிற்குள் புகுந்த ஆறுமுகம், இசக்கியப்பனின் மனைவி பிரேமா மற்றும் 5 வயது குழந்தை தருணை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த … Read more

இனிமையான மொழி தமிழ் மொழி என்பதால் விரும்புகிறேன் !

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் மொழி இனிமையான மொழி என்றும், அதனால் தான் தமிழை விரும்புவதாகவும்  கூறியுள்ளார். கோவை சரவணம்பட்டியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மைய நூலகத்தையும், ஞானசமை என்னும் தியான மையத்தையும் திறந்து வைத்தார். பின்னர் மாணவர்களிடையே பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பணம், புகழ் ஆகியவற்றைக் காட்டிலும், ஒழுக்கம் வாழ்வின் அடிப்படை என்றும், சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒழுக்கத்தை அடிப்படியாக கொண்டு … Read more

புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலையை உடைத்ததாக சிஆர்பிஎப் வீரர் செந்தில்குமார் கைது!

புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் சிஆர்பிஎப் வீரர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் குடிபோதையில் சிலையை உடைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில், சத்தீஸ்கரில் பணி புரிகிறார் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழஎன்ற த்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட … Read more

கண்ணீர் மல்க வீட்டுக்கு வந்தார் சசிகலா!

15 நாள் பரோல் வழங்கப்பட்டதை தொடர்ந்து  கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளிவந்தார். பின்னர் பெங்களூருவிலிருந்து கார் மூலமே தஞ்சைக்கு வந்தடைந்தார் சசிகலா. அப்போது, அழுதபடியே அவர் அமைதியாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது. இரவு 7.15 மணியளவில் நடராஜன் உடல் வீட்டுக்கு வந்த போது, சிறிது நேரத்தில் சசிகலா மற்றும் தினகரனும் வீட்டுக்கு வந்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

முதல்வரை சந்தித்த பின்னரும் போராட்டம் தொடரும்?

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ‘தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்’ என முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த பின்னர்  தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தியேட்டர் லைசென்ஸை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இன்று மனு அளித்தனர். சென்னை கிரீன்வேஸ் … Read more

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நில அளவையில் ஈடுபட்டிருந்த 4 பேர் சிறைபிடிப்பு!!

போராட்டக் குழுவினர் ,கதிராமங்கலத்தில் நில அளவையில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை,  சிறைபிடித்தனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 306-வது நாளாக ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், நில அளவையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போராட்டக்குழுவினர் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சாலை அகலப்படுத்தும் பணிக்கான ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் அழைத்து சென்ற போலீசார் விசாரணை … Read more

நடராஜன் உடல் தஞ்சாவூர் வந்தது !தஞ்சாவூர் சென்றடைந்தார் சசிகலா….

சசிகலா கணவர் நடராஜன் (76), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  இன்று(மார்ச் 20) அதிகாலை சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பெங்களூரு சிறை 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. இன்று இரவு 7.20 மணியளவில் அவரது உடல் தஞ்சாவூர் வந்தது. அதே நேரத்தில் சசிகலாவும் சிறையில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து உடல்வீட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை … Read more

காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி கேள்வி?ஆர்டர்லி முறையை கடைபிடிக்கிறீர்களா?

தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆர்டர்லி முறையை கடைபிடிக்கிறீர்களா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும்,  உத்தரவிட்டுள்ளார். காவல் உயர் அதிகாரிகளின் இல்லங்களிலும், அலுவலகங்களிலும், அவர்களுக்கு உதவிகள் புரிவதற்காக, காவல்துறையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆர்டர்லியாக பணியமர்த்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், பல ஆண்டுகளுக்கு முன் ஆர்டர்லி முறை கைவிடப்பட்டது. இருப்பினும், சில காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையில் பணியில் இருப்பவர்களையே, ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், 1979ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், ஆர்டர்லி … Read more

தேதி குறிப்பிடாமல் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒத்திவைப்பு!

விசாரணை ஆணையத்தலைவர் நீதிபத ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் நடக்க இருந்த விசாரணை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக  அறிவித்துள்ளார். இதில், நாளை ஜெயலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும், நாளை மறுநாள் சமையலர் சேகரும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வெங்கையா நாயுடு மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ரத்து!

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொடுப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தலைவரான வெங்கையா நாயுடு எம்.பி.க்களுக்கு புதன் கிழமை விருந்து கொடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் மாநிலங்களவை தொடர்ந்து 12-வது நாளாக முடங்கியது. இதையடுத்து விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.