காவிரி பிரச்சனைக்கும் கர்நாடக அரசியல் குழப்பத்திற்கும் தொடர்பில்லை!அமைச்சர் கடம்பூர் ராஜூ

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ,கர்நாடக அரசியல் குழப்பத்திற்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தமிழக அரசின் தமிழ்செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய கடம்பூர் ராஜூ, பயிர்கடன் தள்ளுபடி மூலம், உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ்வதாக கூறினார். மேலும் … Read more

BREAKING NEWS:எங்களிடம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மஜத எம்.எல்.ஏக்கள் உள்ளனர்!திடுக் தகவலை வெளியிட்ட பாஜக தலைவர்

எங்களிடம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மஜத எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று  பாஜக தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். யாகூப் மேமன் மும்பைத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட போதும் … Read more

புழல் சிறையில் குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்த சிறை காவலர்!

குண்டர் தடுப்பு காவலில் புழல் மத்திய சிறையில் வைக்கப்பட்ட கொலை வழக்கு கைதியை விடுவித்த விவகாரத்தில் சிறை காவலர் ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் சிறைத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை அடுத்து புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்த சிறையில் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றவாளிகளுக்கு கஞ்சா சப்ளை, செல்போன் சப்ளை என … Read more

BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சர் பதவிக்கு தொடங்கியது ஆபத்து?என்னவாகும் எடியூரப்பா முதலமைச்சர் பதவி!

எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெர்வித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். யாகூப் மேமன் மும்பைத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட போதும் இதே போன்று உச்சநீதிமன்றம் விடிய விடிய … Read more

BREAKING NEWS:குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

உச்சநீதிமன்றம் இன்று,குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை அறிவித்தது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி, திமுக எம்.ல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், அதனால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற … Read more

சென்னையில் செயின்பறிப்புக்கு புதிய உத்தியை கையாண்ட இளைஞர்கள்!

செயின்பறிப்பிற்கு சென்னையில்  புதிய உத்தியை கையாண்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண் ஒருவரை இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள் இடித்து தள்ளி விட்டு செயின் பறிக்க முயன்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த அன்பரசு மற்றும் ராஜேஷ் என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் செல்லும் இவர்கள் சாலையில் நகை அணிந்து செல்பவர்கள் மீது மோதி விடுவதாகவும், கீழே விழுந்தவர்களுக்கு … Read more

சென்னையில் உயிரை கொடுத்து பேத்தியின் உயிரை காப்பாற்றிய பெண்!

பால்கனி இடிந்து விழுந்ததில் சென்னை முகப்பேரில்  பலியான பெண், உயிர் போகும் தருணத்திலும் தனது மடியில் இருந்த 8 மாத குழந்தையான தனது பேத்தியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் நடராஜன் – லெட்சுமி தம்பதியினர் 14 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு தமிழ்செல்வி, சுகன்யா என இரு மகள்களும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டுமாத பெண் … Read more

பாஜகவின் செயல் சரியில்லை! எம்எல்ஏக்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு அமர்த்திய விமானங்களுக்கு அனுமதி மறுப்பு!

மதச்சார்பற்ற ஜனதா தளம்,காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா எம்எல்ஏக்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு அமர்த்திய விமானங்களுக்கு விமானப் போக்குவரத்துத்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இரவோடு இரவாக மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் ஹைதரபாத், கொச்சிக்கும்,கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி விட்டது. எம்.எல்.ஏக்கள் விலை போய்விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் … Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகையில் 122வது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் உதகையில், 122வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார்.உதகையில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. 150க்கும் மேற்பட்ட ரகங்களில், சுமார் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடக்கி வைக்க இருக்கிறார். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக, இம்முறை … Read more

இன்று ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்!

இன்று உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் ஓய்வு பெறுகிறார். அவருடைய ஏழு ஆண்டு பதவிக்காலம் இம்மாதம் 22ம் தேதி முடிகிறது. இருப்பினும் நீதிமன்றத்திற்கு 41 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர் இன்றே பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். தமது பணியின் கடைசி நாளில் நீதிமன்றத்தில் அமர உள்ள செலமேஸ்வர் மாலையில் பணியில் இருந்து விலகுவார். நேற்று அவருக்கு வழக்கறிஞர்கள் சார்பில் விடைகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத்துறை இணையமைச்சருமான சாந்தி பூசன் உள்ளிட்டோர் … Read more