கார் விபத்தில் இறந்த 10 தமிழர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்..!

இன்று அதிகாலை ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  10  தமிழ் பக்தர்கள்  கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே குனிகல் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 குடும்பத்திற்கு தலா 1 … Read more

விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது. இன்று காலை ராமநாதபுரத்தில் புதியதாக மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது ஸ்டாலினுக்கு – முதல்வர் பழனிசாமி

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது ஸ்டாலினுக்கு என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  சேலத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த  கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், விவசாயிகளை கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம். ஸ்டாலினின் பிரசாரத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக திட்டங்களை பட்டியலிட்டு காண்பித்துள்ளோம். அதிமுக அரசு திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் ஸ்டாலின் சொல்லட்டும். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின்  தமிழகத்தில் … Read more

புதிதாக 2 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி – முதலமைச்சர் பழனிசாமி

அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  முதலில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல்,  திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இதன் … Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களிக்க சிலுவம்பாளையம்  வந்து உள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது மனைவி ,மகன் மற்றும் மருமகள் அனைவரும் வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இன்று முதற்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் … Read more

17 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் உள்ள நடூர் பகுதியை நேரில் பார்வையிட்டார்.முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.மேலும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம், … Read more

சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு – முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலை கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ,4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் உள்ள நடூர் பகுதியை நேரில் பார்வையிட்டு வருகிறார்.இவருடன் … Read more

தமிழகத்தின் 36 வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை

தமிழகத்தின் 36 வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை. தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர்  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் திருப்பத்தூர் ,ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது. இன்று முதலாவதாக திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இதற்கு பின் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெற்றது.தொடக்க விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி  கலந்து கொண்டு … Read more

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்‌க விழா  சாமியார்மடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சியின்  மாவட்‌டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது,  அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் கூடவே பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, … Read more

வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

வருகின்ற 19-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.இந்த நிலையில்  நாளை மறுநாள் (நவம்பர் 19 -ஆம் தேதி )காலை 11 மணிக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது .இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது